தேவையான பொருட்கள் :
நறுக்கிய காய்கறி கலவை (கேரட் பீன்ஸ் கோஸ் பச்சைப் பட்டாணி குடமிளகாய் காலிஃப்ளவர்) – ஒரு கப்
பூண்டு – 10 பல்
தோல் சீவிய இஞ்சி – சிறிய துண்டு
கரம் மசாலாத்தூள் – சிறிதளவு
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
மிளகாய்த்தூள் – தேவையான அளவு
தனியாத்தூள் (மல்லித்தூள்) – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பூண்டு, இஞ்சி, வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காலிஃப்ளவரை உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அதனுடன் வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் அதில் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும்.
காய்கறிகள் வெந்தவுடன் அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.
முட்டை வெந்து உதிரியாக வந்ததும் மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.