அப்பளம் போட்ட வத்தக்குழம்பு

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள்

சுண்டக்காய் வத்தல் (அ) மணத்தக்காளி வற்றல் – தேவையான அளவு
அப்பளம் – 4
வெங்காயம் – அரை கப்
புளி – எலுமிச்சை அளவு
நசுக்கிய பூண்டு – 4 பற்கள்
கறிவேப்பிலை – கொஞ்சம்
வரமிளகாய் -1
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு – தலா 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி -1 டீஸ்பூன்
ரசப்பொடி – 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 1டீஸ்பூன்
பருப்பு பொடி -1 டீஸ்பூன்
அரிசிமாவு – 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு
வெல்லம் – கொஞ்சம்

அப்பளம் போட்ட வத்தக்குழம்பு

செய்முறை

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பூண்டை நசுக்கிக் கொள்ளவும்.

புளியை ஊறவைத்து நீர்க்க கரைத்து எடுத்துக்கொள்ளவும்.

பாத்திரத்தில் நல்லெண்ணெய் காயவைத்து வத்தலை பொரித்து தனியாக எடுத்து வைக்கவும்.

அதே எண்ணெயில் கடுகு, வெந்தயம், க.பருப்பு, உ.பருப்பு சேர்த்து தாளித்த பின்னர் அப்பளத்தை சிறு துண்டுகளாக உடைத்து சேர்க்கவும்.

அப்பளம் பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம் நசுக்கிய பூண்டு உடைத்த மிளகாய் வத்தல் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் சாம்பார் பொடி, ரசப்பொடி, மல்லிப்பொடியை சேர்த்து தேவையான உப்பும் சேர்க்கவும். (வத்தலில் உப்பு இருக்கலாம் கவனமாக உப்பைச் சேர்க்கவும்.)

புளிக்கரைசலைச் சேர்த்து கொதிக்கவிடவும்.

மிதமான தீயில் புளிக்கரைசல் பச்சை வாசம் போக கொதித்ததும் பொரித்து வைத்திருக்கும் வத்தலையும் சேர்த்து கொதிக்க விடவும்.

அடுத்து அதில் வெல்லம் சேர்க்கவும்.

அரிசிமாவை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து சேர்க்கவும். (பருப்பு பொடி சேர்ப்பதாக இருந்தால் அரிசிமாவுடன் சேர்த்து கரைத்து சேர்க்கவும்)

குழம்பு நன்கு சுண்டி எண்ணெய் மிதந்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

சுவையான அப்பளம் போட்ட வத்தக்குழம்பு தயார்.

Related Posts

Leave a Comment

Translate »