இதய நோய் வராமல் காக்கும் தக்காளி

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தக்காளியின் சத்து பட்டியல்

சிவந்த, பழுத்த தக்காளியை ஒரு கப் (150 கிராம்) அளவிற்கு உண்ணும் போது போதுமான அளவு வைட்டமின் ஏ,சி,கே போலேட் மற்றும் பொட்டாசியம் கிடைக்கும். இயற்கையாகவே தக்காளியில் சோடியம், சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைந்த அளவில் இருக்கிறது. உயிர்ச்சத்து பி1, நியாசின் உயிர்ச்சத்து, வைட்டமின் பி6, மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரமும் தக்காளியில் உள்ளதால் அது ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணையாக நிற்கும்.

இது போக 150 கிராம் தக்காளியில் 2 கிராம் நார்ச்சத்து உள்ளது, தினமும் பரிந்துரைக்கப்படும் அளவில் 7 சதவீத நார்ச்சத்து இதில் இருந்து கிடைத்துவிடுகிறது. தக்காளியில் நீர்ச் சத்தும் அதிகமாக உள்ளது. அது வயிற்றையும் நிரப்பிவிடும். மேலும் ரத்தக் கொதிப்பு, அதிக கொழுப்பு, வாதம் மற்றும் இதய நோய்களில் இருந்தும் தக்காளி காக்கும்.

சத்தான ஊட்டச் சத்தின் கலவையாக தக்காளி விளங்கினாலும் அதையும் மீறி இன்னும் பல நன்மைகளை உள்ளடக்கிய தக்காளி சருமத்திற்கும், எலும்புகளுக்கும் நல்ல ஒரு ஊட்டமாக விளங்குகிறது.

இதில் கேரட், பீட்ரூட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள பீட்டா கரோடின் தக்காளியிலும் உள்ளது. அது சருமத்தை சூரிய வெப்பத்தில் இருந்து காக்கும். மேலும் தக்காளியில் உள்ள லைகோபீன், புறஊதாக் கதிர்களில் இருந்து காக்கும், சரும சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும்.

வலுவான எலும்புகளுக்கு தக்காளி உதவுகிறது. வைட்டமின் கே, மற்றும் கால்சியம் எலும்பை திடமாக வைத்து, எலும்புகளில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்கிறது. இதில் லைகோபீன், எலும்பின் பெருண்மையை மேம்படுத்தும். எலும்புப்புரை நோய்களை எதிர்த்து போராடவும் உதவுவது தக்காளி.

ஆண்கள் தக்காளியை அதிகம் சாப்பிட்டு வந்தால் 20 சதவீதம் புரோஸ்டேட் நோய் வரும் அபாயத்தை குறைக்கலாம். தக்காளியில் வைட்டமின் சி, மற்றும் இரும்பு சத்து சம அளவில் உள்ளதால் ரத்த சோகையை குணப்படுத்துகிறது. வெட்டுக் காயங்கள் ஏற்பட்டால் உடனே பச்சை தக்காளியை வெட்டுப்பட்ட காயத்தில் வைத்தால் ஆன்டி செப்டிக்காக செயல்படும்.

தக்காளி ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கவும் மற்றும் உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கிறது. தக்காளியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் கொழுப்பு படிவதை தடுக்கிறது. மாரடைப்பு வராமல் தடுக்கிறது.

தக்காளியில் உள்ள லைகோடீன் தான் இதற்கும் துணை புரிகிறது. முக்கியமாக புரோஸ்டேட், கருப்பைவாய் புற்று, வாய்புற்று, தொண்டை புற்று, வயிற்று புற்று, உணவுக்குழாய் புற்று, குடல் புற்று, கருப்பை புற்று போன்ற பல வகையான மிகவும் துன்பத்தை தரக்கூடிய புற்று நோய்கள் வராமல் தடுக்கிறது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரியான அளவில் வைத்திருக்க தக்காளி உதவுகிறது. குரோமியம் அதிகம் இருப்பதால், இது சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.

கண்ணுக்கு மிகவும் நல்லது. வைட்டமின் ஏ, கண் பார்வையை மேம்படுத்தி மாலை கண் வியாதி வராமல் தடுக்கும், புரை வளர்வதை தடுக்கிறது.

தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ கூந்தலை திடமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். கூந்தலை அழகாகவும் காண்பிக்க தக்காளி உதவுகிறது.
சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதையும் பித்தப்பையில் கற்கள் உருவாவதையும் தக்காளி தடுக்கும்.

லேசானது முதல் கடுமையான வலியை (வாதம் அல்லது முதுகு வலி) சந்திக்கும் நோயாளிகளுக்கு தக்காளி உதவுகிறது, இதில் உள்ள பயோப்ளே மற்றும் கரோடினாய்டுகள் அதிகம் உள்ளதால், அழற்சி ஏற்படாமலும் தடுக்கும்.

தினமும் தக்காளி எடுத்துக் கொள்வதால் உடல் எடை அதிகம் ஆகாமல் தடுக்கப்படுகிறது. இதில் உள்ள நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து எடையை அதிகம் ஆகாமல் தடுக்கிறது. வயிற்றையும் நிறைக்கும், கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ள உணவாகவும் இது விளங்கும்.

தக்காளி நமது சருமத்தில் உள்ள மைட்டோ காண்ட்ரியல் டிஎன்ஏ நமது சருமம் வயதாகாமல் பாதுகாக்கிறது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் வயதாவதையும் தாமதப்படுத்துகிறது.

நிறைய நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் சிறந்த மலமிளக்கியாக பயன்படுகிறது.

தக்காளியில்
    18 மி.கி கால்சியம்
    427 மி.கி- பொட்டாசியம்
    43 மி.கி- பாஸ்பரஸ்
    24.7 மி.கி வைட்டமின் சி

மேலும் ஆல்பா லிப்போயிக் அமிலம், லைகோபீன், கோலீன், போலிக் அமிலம், பீடா கரோடீன், லூட்டீன் போன்ற சத்துக்கள், ஆண்டி ஆக்ஸிடன்டுகள் இருக்கிறது.

தேவையான அளவு போலேட் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பும் பின்பும் அதிகம் தேவைப்படுகிறது. அதனால் தக்காளி கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்வது அவசியமாகிறது.

Related Posts

Leave a Comment

Translate »