சூப்பரான மாங்காய் – மட்டன் குழம்பு

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள் :

சின்ன வெங்காயம் – 100 கிராம்
மட்டன் – 200 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
கரம் மசாலாத் தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 5
நல்லெண்ணெய் – தேவையான அளவு
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு
மாங்காய் – கால்பகுதி மாங்காய் (நறுக்கவும்)

மாங்காய் - மட்டன் குழம்பு

செய்முறை:

மட்டனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மாங்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

பிரஷர் குக்கரில் மட்டன், இஞ்சி பூண்டு விழுது பாதியளவு, மிளகாய்த்தூள், உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் பச்சை மிளகாய், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், மாங்காய்த் துண்டுகள் போட்டு வதக்கவும்.

மாங்காய் நன்றாக வெந்ததும கடைசியில் வேக வைத்த மட்டனைப் போட்டுப் புரட்டி அடுப்பை அணைத்து கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான மாங்காய் – மட்டன் குழம்பு ரெடி

Related Posts

Leave a Comment

Translate »