தலை முதல் கால் வரை… சரும அழகை பாதுகாக்கும் பெட்ரோலியம் ஜெல்லி…

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

எல்லா வீடுகளிலும் பெட்ரோலியம் ஜெல்லி தடிப்புகள், சிறிய வெட்டுக்காயங்கள், பாத வெடிப்புகள், உதடு வெடிப்புகளை குணப்படுத்த உதவுகிறது.  ஆனால் இவற்றை தவிர பெட்ரோலியம் ஜெல்லி தலை முதல் கால் வரை பல்வேறு அழகு பிரச்சனைகளை தீர்க்கவும் பயன்படுகிறது. அவற்றை குறித்து இங்கு பார்ப்போம்.

மேக் அப் ரிமூவர் தீர்ந்து விட்டதா? பதட்டப்பட வேண்டாம். சிறிது பெட்ரோலிய ஜெல்லியை பஞ்சில் எடுத்து மேக் அப்பை சுலபமாக எடுத்துவிடலாம்.

உங்களுக்கு பிடித்த ஐ ஷாடோவை சிறிதளவு பெட்ரோலியம் ஜெல்லியுடன் சேர்த்தால் உங்களுக்கு பிடித்தமான லிப் க்ளாஸ் தயார்.

நீண்ட நேரம் வெளியே சுற்ற வேண்டுமா? கவலைப்பட வேண்டாம். சிறிதளவு பெட்ரோலியம் ஜெல்லியை உங்கள் கை கால் முட்டிகளில், கைகளில், கால்களில் தடவிக் கொள்ளுங்கள். அதன் மீது உங்களுக்கு பிடித்தமான வாசனை திரவியத்தை பூசுங்கள். நாள் முழுவதும் மணமாக இருக்கும்.

புருவங்கள் சரியான வடிவத்தில் இல்லையா? சிறிது பெட்ரோலியம் ஜெல்லி எடுத்து தடவி அழகான வடிவத்திற்கு கொண்டு வாருங்கள்.

ஹேர் டை தடவும் பொழுது அது ஒழுகி உங்களின் நெற்றிக்கு வரலாம். எனவே, அதிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க, சிறிது பெட்ரோலியம் ஜெல்லியை உங்கள் நெற்றியில் தடவிகொள்ளுங்கள். இனி கறை படாது.

தடிமனான முடி இருப்பவர்கள், அவர்களுக்கு பிடித்த ஹேர் ஸ்டைல் போடுவதில் பெரும் சிரமத்தை சந்திப்பார்கள். இந்த பிரச்சனைக்கும் சிறிது பெட்ரோலியம் ஜெல்லி தடவி, உங்களுக்கு பிடித்தமான ஹேர் ஸ்டைலை போட்டுக்கொள்ளுங்கள்.

பழைய லிப்ஸ்டிக் உபயோகப்படுத்தி உங்களுக்கு சலிப்பாக இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்களின் பழைய லிப்ஸ்டிக்கை உதட்டில் தடவி, அதன் மீது சிறிது பெட்ரோலியம் ஜெல்லி தடவுங்கள். உதடுகள் பளபளப்பாக இருக்கும்.

சிறிது சமையல் சோடா மற்றும் பெட்ரோலியம் ஜெல்லி சேர்த்து, முகத்தில் தடவ, சருமத்தில் உள்ள வறட்சியை போக்கி, ஈரப்பதத்தை வழங்கி, சருமத்தை மென்மையாக்குகிறது.

சக்கரை மற்றும் பெட்ரோலியம் ஜெல்லி சேர்த்து சருமத்தில் தடவ, அது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது.

நீங்கள் எப்போதும் பயன்படுத்தும் இரவு கிரீம் உங்களுக்கு பிடிக்கவில்லையா? சிறிது பெட்ரோலியம் ஜெல்லியை முகத்தில் இரவு கிரீமாக தடவிக்கொள்ளுங்கள். காலையில் முகம் பளபளப்பாக இருக்கும்.

நுனி முடியில் நிறைய பிளவுகள் உள்ளனவா? பார்லருக்கு சென்று முடி வெட்ட நேரமில்லையா? பதட்டப்பட வேண்டாம். சிறிது பெட்ரோலியம் ஜெல்லியை முடியில் தடவி உங்களுக்கு விருப்பமான ஹேர் ஸ்டைலை போட்டுக்கொள்ளுங்கள்.

சிறிது பெட்ரோலியம் ஜெல்லியை கண் இமைகளில் படுக்க செல்வதற்கு முன் பூசுங்கள். இதனால் உங்கள் இமை முடிகள் ஈரப்பதத்துடனும் பளபளப்பாகவும் இருக்கும்.

நெய்ல் பாலிஷ் வைக்கும் பொழுது, அது கை விரல்களில் படுகிறதா? இப்போது நெய்ல் பாலிஷை மிக சுலபமாக வைக்கலாம். சிறிது பெட்ரோலியம் ஜெல்லியை கை விரல்களில் சுற்றித்தடவி பின்பு நெய்ல் பாலிஷ் இடுங்கள். இப்போது நெய்ல் பாலிஷ் விரல்களில் படியாது.

Related Posts

Leave a Comment

Translate »