தேவையான பொருட்கள்
திராட்சை, ஆப்பிள், மாம்பழம், கொய்யா, கிவி, ஸ்ட்ராபெரி மற்றும் பப்பாளி பழ கலவை – 2 கப்,
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள் ஸ்பூன்,
பொடித்த சர்க்கரை – ஒரு டேபிள் ஸ்பூன்,
வெனிலா ஐஸ்கிரீம் – 2 கப்.
செய்முறை
ஆப்பிள், மாம்பழம், கொய்யா, கிவி, ஸ்ட்ராபெரி, பப்பாளி பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பழக்கலவையை போட்டு அதனுடன் எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சேர்த்துக் கலந்து பிரிட்ஜில் வைத்து குளிர வைக்கவும்.
2 மணி நேரம் கழித்து எடுத்து இதன் மேல் ஐஸ்கிரீமை போட்டு பரிமாறவும்.
விருப்பப் பட்டால் சிறு துண்டுகளாக நறுக்கி வறுத்த பாதாம், முந்திரியை மேலே தூவியும் பரிமாறலாம்.
சூப்பரான ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம் ரெடி.