ஹோட்டல் ஸ்டைலில் இறால் கோலா உருண்டை குழம்பு செய்யலாம் வாங்க

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள் :

இறால் – முக்கால் கிலோ,
கடலை மாவு – அரை கப்,
சின்ன வெங்காயம் – 150 கிராம்,
பெரிய வெங்காயம் – 3,
தக்காளி – 4,
மீன் வறுவல் மசாலா – 50 கிராம்,
மிளகாய்த் தூள் – 2 டேபிள் ஸ்பூன்,
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – சிறிதளவு,
சோம்பு, சீரகம், கசகசா – தலா ஒரு டீஸ்பூன்,
இஞ்சி – பூண்டு விழுது – 3 டீஸ்பூன்,
தேங்காய் – அரை மூடி,
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

இறால் கோலா உருண்டை குழம்பு

செய்முறை :

இறாலை நன்றாக சுத்தம் செய்து வெதுவெதுப்பான நீரில் முக்கி எடுத்து தனியே வைக்கவும்.

கொத்தமல்லி, சின்ன வெங்காயம், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சின்ன வெங்காயத்துடன் சோம்பு, சீரகம், கசகசா ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்.

தேங்காயை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் மீன் வறுவல் மசாலா, மிளகுத் தூள், இஞ்சி – பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், அரைத்து வைத்த வெங்காய விழுது, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு திக்கான மாவு பதத்தில் வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒவ்வொரு இறாலாக தனியாக எடுத்து மாவுடன் உருட்டி, சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து தனியாக வைக்கவும்.

மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் மீதமுள்ள இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இஞ்சி – பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து குழைய வேக விடவும்.

தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கிய பின்னர், சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.

அரைத்த தேங்காய் விழுதை அதனுடன் கலந்து, திக்கான பதம் வந்ததும் பொரித்த இறால் உருண்டைகளை சேர்த்து, அடுப்பை ‘சிம்’மில் வைத்து வேக விடவும்.

குழம்பு திக்கான பதம் வந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்த மல்லி தூவி இறக்கினால்… சுவையான இறால் கோலா உருண்டை குழம்பு ரெடி!

Related Posts

Leave a Comment

Translate »