காரசாரமான ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை மட்டன் குழம்பு

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள் :

புளிச்சக்கீரை – 1 கட்டு
மட்டன் – 1/2 கிலோ
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
ஏலக்காய் – 4
கிராம்பு – 3
பட்டை – 1 இன்ச்
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது

ஆந்திரா ஸ்டைலில் புளிச்சக்கீரை மட்டன் குழம்பு

செய்முறை :

புளிச்சகீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், புளிச்சக் கீரையை சேர்த்து வதக்கி மூடி வைத்து, 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கி நன்றாக மசித்துகொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளித்த பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.

அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மட்டன் துண்டுகளை சேர்த்து 10 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

பின் அதில் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, 1 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி குறைவான தீயில் 6 விசில் விட்டு இறக்க வேண்டும்.

விசில் போனதும், குக்கரை திறந்து மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் மசித்த புளிச்சக்கீரையை சேர்த்து கிளறி மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து,  பின் கரம் மசாலா சேர்த்து பிரட்டி கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.

ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை மட்டன் குழம்பு ரெடி !

Related Posts

Leave a Comment

Translate »