வைரஸ் காய்ச்சலை விரட்டும் ஹோமியோபதி மருத்துவம்

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

வைரஸ் காய்ச்சலில் சாதாரண வைரஸ் காய்ச்சல், சிக்குன்குனியா, டெங்கு, சின்னம்மை, பன்றிகாய்ச்சல் ஆகியவை முக்கியமானவை. சாதாரணமாக வைரஸ் காய்ச்சல் வரும் போது தலைவலி, உடல்வலி, குளிர், இருமல் இருக்கும். சிக்குன்குனியா காய்ச்சல் இருக்கும் போது மூட்டுவலி வந்து பிறகு காய்ச்சல் வரும். காய்ச்சல் சரியான பிறகும் மூட்டுவலி குறையாது. மணிக்கட்டு, கரண்டை கால் உள்ளிட்ட இடங்களில் வலி அதிகமாக இருக்கும். சிலருக்கு கால் வீக்கமும் இருக்கும். தலைசுற்றல் ஊறல், வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

பொதுவாக நோய்களின் அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடக்கூடியவை. டெங்கு காய்ச்சல் பாதித்தோருக்கு உடல் வெப்பநிலை உயர்ந்து காணப்படும். இருமல், சளி, குளிர் இருக்கும். சின்னம்மை பாதித்தோருக்கு முதலில் தோலில் ஊறல் மற்றும் வியர்க்குரு போல் வரும் ஓரிரு நாளில் வியர்க்குரு நீர்கோர்த்து முத்துபோல் மாறிவிடும். காய்ச்சல், உடல்வலி இருக்கும். நோய் சரியாக 2 முதல் 3 வாரங்கள் ஆகும்.

தனிமையில்…

பன்றிக்காய்ச்சல் பாதித்தோருக்கு உடல் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். இருமல், சளி இருக்கும். உடல்வலி மற்றும் சோர்வு காணப்படும். இந்த வைரஸ் காய்ச்சல்களில் அறிகுறிகளை பார்த்தால் ஒரே மாதிரியாக இருக்கும். சிறு, சிறு வேறுபாடுகள் மட்டுமே காணப்படும். சாதாரணமாக வைரஸ் காய்ச்சலாக இருந்தாலும் சரி, வைரஸ் சம்பந்தமான எந்த நோயாக இருந்தாலும் சரி எளிதாக பரவும் தன்மை கொண்டது. நோய் பரவாமல் இருக்க நோய் பாதித்தவரை தனி அறையில் தனிமையில் இருக்கச் செய்ய வேண்டும்.

இந்த நோய்களை கட்டுப்படுத்துவதில் ஹோமியோபதி மருந்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஹோமியோபதி மருந்துகள் பக்கவிளைவுகள் இல்லாதவை. எவ்வளவு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டாலும் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவது இல்லை. பத்தியமும் கிடையாது. ஒருவருடைய அனைத்து நோய் அறிகுறிகளையும், உடல் மற்றும் மனம் தொடர்பான அனைத்து அறிகுறிகளையும் அலசி ஆராய்ந்து சரியான அளவில் மருந்துகள் கொடுத்து நோயை குணப்படுத்துவது ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்பம்சமாகும்.

Related Posts

Leave a Comment

Translate »