தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் – 200 கிராம்
கோஸ் – சிறிய துண்டு
கேரட் – 1
தக்காளி – 1
வெங்காயம் – 1
சோம்பு – அரை தேக்கரண்டி
சீரகம் – கால் தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
சில்லி ப்ளேக்ஸ் – ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை – சிறிது
கரம் மசாலா தூள் – ஒரு தேக்கரண்டி
மிளகு – ஒரு தேக்கரண்டி
சோளமாவு – 2 தேக்கரண்டி
மிளகுத் தூள் – 2 தேக்கரண்டி
வெண்ணெய் – 3 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, கோஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் சோள மாவை கரைத்து வைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து 2 தேக்கரண்டி வெண்ணெய் விட்டு சோம்பு, சீரகம், மிளகு, கரம் மசாலா தூள் சேர்த்து தாளித்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி சற்று வதங்கியதும் கேரட், கோஸ் கொத்தமல்லித் தழை, சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து வதக்கவும்.
5 நிமிடங்கள் கழித்து சிக்கன் துண்டுகளைச் சேர்த்து உப்பு, மிளகுத் தூள் சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசனை போனதும் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கொதி வரும் போது சோள மாவுக் கரைசலை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
நன்கு கொதி வந்ததும் மீதமுள்ள வெண்ணெயை சேர்க்கவும்.
5 நிமிடங்கள் கழித்து குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வைத்து இறக்கவும்.
சுவையான சிக்கன் வெஜிடபுள் சூப் தயார்.