தேவையான பொருட்கள்
வாழைப்பழம் – 3,
மைதா – 1 கப்,
சர்க்கரை – /12 கப்,
தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்,
ஏலக்காய் பவுடர் – 1/4 டீஸ்பூன்,
பேக்கிங் பவுடர் – 1/4 டீஸ்பூன்,
எண்ணெய் – தேவைக்கேற்ப,
நெய் – 1 டீஸ்பூன்.

செய்முறை
மிக்சியில் சர்க்கரை போட்டு பவுடர் செய்து அதில் வாழைப்பழத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அதை பாத்திரத்தில் போட்டு அதனுடன் மைதா, சர்க்கரை, தேங்காய் துருவல், ஏலக்காய் பவுடர், பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
குழிப்பணியாரக் கல்லில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு அதில் மாவை ஊற்றி அதை 5 முதல் 7 நிமிடம் வரை வேக வைத்து எடுத்தால் சுடச்சுட வாழைப்பழ பால்ஸ் ரெடி.