தாயும் சேயும் நோய்த் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசி அவசியமா?

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

பெற்றோர் ஆகப்போகும் தம்பதியருக்குக் கருத்தரிப்பு ஒரு மகிழ்ச்சியான நேரம். அதே சமயம், சிசுவின் பாதுகாப்பிற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இதுவே சரியான தருணம் ஆகும். மருத்துவரின் நேரம் குறித்த சந்திப்புகள், மருத்துவ பரிசோதனைகள் போன்றவை மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இருப்பினும், தாய்மார்கள் தங்கள் பிஞ்சு குழந்தையின் நலனுக்காக ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்துள்ள உணவை உட்கொள்வது, பிரசவத்திற்கு முந்தைய பயிற்சிகளில் ஈடுபடுவது, மூச்சுப்பயிற்சியில் ஈடுபடுவது, நல்ல தாயாக இருப்பது குறித்த ஆலோசனைகளைப் பெறுவது, தடுப்பூசி தொடர்பான முக்கிய பிரச்சனைகள் போன்றவை அடங்கும். தாய்க்கும் சேய்க்கும் பல்வேறு வகையான தடுப்பூசிகள் உள்ளன. அவை கர்ப்ப காலத்திலும் அதற்குப் பிறகும் போடப்பட வேண்டியவை. மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி நினைவில் கொண்டு தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது அவசியம். இவற்றில் ஏதேனும் ஒன்று இயலாமல் போனாலும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.

கர்ப்ப காலத்தில் தடுப்பூசிகள் என வரும் போது, இந்தியாவில் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இந்த விஷயத்தில் ஒரு பெரிய சவாலானது தடுப்பூசிகளின் அணுகல். தடுப்பூசி பாதுகாப்பு தகவல்கள் மற்றும் பரிந்துரைகள் பற்றிய அறிவின்மையால் கர்ப்பிணிப் பெண்களிடையே தடுப்பூசி அணுகலைக் குறைக்க வழிவகுக்கிறது. இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி புறக்கணிக்கப்பட்ட (குறிப்பாக இந்தியாவில்) தடுப்பூசிகளில் ஒன்றாகும். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையத்தால் கட்டாயப்படுத்தப்பட்ட மற்றும் அமெரிக்க மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட இந்த தடுப்பூசி இங்கு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

கர்ப்பிணி அல்லாத பெண்களுடன் ஒப்பிடும் போது, கர்ப்பிணிப் பெண்களுக்குத் தொற்று நோய்கள் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் இந்த வகை ஆபத்தை அதிகரிக்கும். ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு அவர்களின் ஆரோக்கியத்தை மட்டமல்ல சிசுவின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். குழந்தைக்கு ஆறு மாத காலம் வரை இது தொடர்கிறது. பிறப்புக்கு பிறகும் குழந்தைகள் ஊட்டச்சத்திற்காகத் தாய்ப் பாலை நம்பியிருக்கிறார்கள்.

கர்ப்பிணிப் பெண்களைத் தாக்கும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் குழந்தையைக் கூட பாதிக்கும். இது பல்வேறு ஆய்வுகள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. குறைப் பிரசவம், மிகக் குறைந்த எடையில் பிறக்கும் குழந்தைகள், சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கும், தாய்க்கும் இவ்வகையான நோய்த் தொற்று தாக்கும் தன்மை அதிகம்.

2009 – 2010 ஆம் ஆண்டு பரவிய H1N1 இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோயால், ஏராளமான கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனைகளில் ஐசியு- வார்டில் அனுமதிக்கப்பட்டனர். சாதாரண பெண்களை ஒப்பிடும் போது, கர்ப்பிணிப் பெண்களின் நோய் தாக்கு விகிதமும் இறப்பு விகிதமும் அதிகம் இருந்தன. 6 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளுக்கும் இன்ஃப்ளூயன்ஸ நோய்த் தொற்று தாக்கும் விகிதம் அதிகம், அதற்கு அடுத்தபடியாக 65வயதுக்கு மேற் உள்ள முதியவர்களுக்கு இந்நோய்த்தொற்று தாக்கும் வாய்ப்பு அதிகம்.

தாய் மற்றும் குழந்தையைப் பாதிக்கும் தொற்று நோய்களைத் தடுக்க இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி ஒரு முக்கியமான வழியாகும். குழந்தைகள் தங்கள் பாதுகாப்பிற்காகத் தாயின் உடலில் உள்ள ஆன்டிபாடிகளை நம்பியிருக்கிறார்கள். 1960ம் ஆண்டில்,கர்ப்பிணிப் பெண்களுக்கு முதலில் பரிந்துரைக்கப்பட்ட இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. நோய்த்தடுப்பு நடைமுறைகள் தொடர்பான ஆலோசனைக்குழு (ACIP) மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றின் தற்போதைய வழிகாட்டுதலின் படி, பெண்கள் கர்ப்பத்தின் போது எல்லா காலகட்டத்திலும் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கின்றன.

கர்ப்ப காலத்தில் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியைத் தடுக்க இந்திய மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு (FOGSI) பரிந்துரைக்கிறது. இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி எடுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்குக் குறைப் பிரசவம், மற்றும் எடை குறைந்த குழந்தை பிறப்பு போன்ற குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால்தான், பெரும்பாலான நிபுணர்கள் கர்ப்பத்தின் ஆரம்பக் கட்டங்களில் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியைப் பரிந்துரைக்கின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு இடத்திலும் காய்ச்சல் பருவங்கள் வேறுபடுகின்றன. தடுப்பூசி தொடர்பாகக் கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் மருத்துவரை அணுகி ஆலோனைப் பெறுவது நல்லது. அதே சமயம், நீங்கள் ஏற்கனவே ஒரு குழந்தை பெற்றெடுத்திருந்தாலோ மற்றும் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி எடுக்காத ஒரு நபராக இருந்தால், உடனடியாக தடுப்பூசி எடுத்துக்கொள்வது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் உதவும். மேலும், தாய்ப்பால் மூலம் குழந்தைக்குத் தேவையான ஆன்டிபாடிகளையும் வழங்க முடியும்.

ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்கான சரியான வழிமுறைகளைப் பெறுவது முக்கியம். இதுபோன்ற தடுப்பூசிகளின் அவசியம் குறித்து உங்கள் மருத்துவரிடம் கேட்டு ஆலோசனை பெறுங்கள். குழந்தை பிறப்புக்கு முன்னும் பின்னும் உங்கள் குழந்தைக்கு என்ன தேவை என்று கேட்டுப் பலனடையவும்.

Related Posts

Leave a Comment

Translate »