ஆரோக்கியம் என்பது எளிய சமாச்சாரம் தான். கீழே கூறப்பட்டுள்ளவைகள் எளிதான முயற்சிகள் தான். இவைகளை கடைபிடித்தால் வளமுடன் வாழலாம்.
* சர்க்கரை சேர்த்த பானங்களை அடியோடு தவிர்த்து விடுவோமே. அநேக கடைகளில் கிடைக்கும் பானங்கள் அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்பட்டவைகளாகவே இருக்கின்றன. இன்றைய இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் உடல் நலம் கெட இவைகள் முக்கிய காரணம் ஆகின்றன. ஆக இன்றோடு இவைகளை உபயோகிப்பதனை நிறுத்தி விடுவோம். எடை அதிகரித்தல் நீரிழிவு 2ம் பிரிவு பாதிப்பு இவை தடுக்கப்படும். இதே போன்று பழ ஜூஸ் குடிப்பதனை தவிருங்கள். பழங்களை வெட்டி சாப்பிடுங்கள். பழ ஜூஸ் குடிப்பதும் சர்க்கரை அதிகமான பானங்களை குடிப்பது போல் தான்.
* கொட்டைகள் எடுத்துக் கொள்ளுங்கள் : Nuts எனப்படும் கொட்டைகள் அன்றாடம் சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள். பாதாம் கொட்டைகள் கால்ஷியம் சத்தும் வைட்டமின் ஈ மக்னீசியம் சத்தும் நார் சத்தும் நிறைந்தவை.
கொலஸ்டிரால் குறைய உதவுவதால் இதய பாதிப்புகளை வெகுவாய் குறைக்கின்றது. சர்க்கரை நோய் பாதிப்பும் குறைகின்றது. முந்திரி இரும்பு மக்னீசியம் சத்து நிறைந்தது. புற்றுநோய் தவிர்க்கப்படுகின்றது. ஆரோக்கிய இதயம் எலும்புகள் பெறுவர்.
வால் நட்ஸ் : இதில் ஓமேகா 3 அதிகம் இருப்பதால் இதய பாதுகாப்பு கிடைக்கின்றது. புற்று நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கின்றது. வயது மூப்பு காரணமாக ஏற்படும் நோய்கள் குறையும்.
வேர் கடலை : இதனை கொட்டை வகைகளில் சேர்ப்பதில்லை என்றாலும் இதன் சத்தின் காரணம் கொண்டு இங்கு குறிப்பிடப்படுகின்றது. இதிலுல்ளபோலேட் மூளைக்கு மிகவும் நல்லது. இது வைட்டமின் ஈ சத்து மிகுந்தது. இதய பாதிப்பு மிகவும் குறைகின்றது.
* Fast Food Junk Food இவைகளைச் தவிருங்கள்.
* 8 மணி நேரமாவது தூங்குங்கள். Quality sleep என்று சொல்வார்கள். அதுபோல் நன்கு ஆழ்ந்த தூக்கம் வேண்டும். முறையான தூக்கம் இல்லாதவர்களுக்கு அதிக ஹார்மோன் பாதிப்புகள் ஏற்படுகின்றன. முறையான தூக்கம் இல்லாத 89 சதவீதம் குழந்தைகளுக்கும் 55 சதவீதம் பெரியோர்களுக்கும் அதிக எடை கூடும் பிரச்சசினை ஏற்படுகின்றது என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
* குடல் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள்.
* சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்பு ஒரு கிளாஸ் தண்ணீர் குடியுங்கள்.
* அதிக ஒளியுள்ள இடத்தில் தூங்குவதற்கு முன் இருக்காதீர்கள். இது கண்களுக்கு அதிக சோர்வினை ஏற்படுத்தும். தூக்கம் கெடும் அதிக சோர்வு ஏற்படும்.
* நீங்கள் காலையோ மாலையோ சிறிது நேரம் கூட இளம் வெய்யிலில் இருக்காதவர் என்றால் மருத்துவ ஆலோசனையோடு வைட்டமின் ஞி3 மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள்.
* பழங்கள் காய்கறிகளை அன்றாடம் மூன்று வேளையும் சாப்பிடுங்கள்.
* புரதம் என்பது தேவையான அளவு அவசியம் வேண்டும். உடலின் வளர்ச்சிக்கும் தேய்மானங்களை சீர்செய்யவும் புரதம் மிக அவசியம். தேவையான அளவு புரதம் இருந்தால் சர்க்கரை அளவு சீராய் இருக்கும். இஇஇஇரத்தக் கொதிப்பு சீராய் இருக்கும்.
* அன்றாடம் குறைந்தது 20 நிமிடமாவது துரித நடை பயிற்சி செய்யுங்கள்.
* புகை மது இவற்றினை அடியோடு விட்டு விடுங்கள்.
* அன்றாடம் ஸ்வீட்ஸ் சாப்பிடும் பழக்கத்தினை விடுங்கள்.