மஞ்சள் மிகவும் சக்தி வாய்ந்த பொருள். அதன் முழு பலனையும் பெற வேண்டுமானால், சரியான பொருட்களுடன் கலந்து பயன்படுத்த வேண்டும். அதுவும் ரோஸ் வாட்டர், பால் மற்றும் தண்ணீர் தான் மஞ்சளுடன் கலந்து பயன்படுத்துவதற்கான சிறந்த பொருட்கள். இப்பொருட்களில் ஏதேனும் ஒன்றுடன் மஞ்சளைக் கலந்து பயன்படுத்தினால், முழு பலனையும் பெறலாம்.
மஞ்சளைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டால், அதனை மணிக்கணக்கில் ஊற வைக்கக்கூடாது. எப்போதுமே மஞ்சள் ஃபேஸ் பேக் போட்டால், 20 நிமிடத்திற்கு மேல் வைக்காதீர்கள். இல்லாவிட்டால், அது மஞ்சள் நிற கறைகளை சருமத்தில் ஏற்படுத்தும்.
தேவையான பொருட்கள்:
புதினா இலைகள் – 6-7
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
செய்முறை:
* புதினா இலைகளை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இக்கலவை மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது வெது வெதுப்பான நீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
* பின்பு அந்த கலவையை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை தினமும் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதனால் முகம் பிரகாசமாக இருக்கும்.
ஒரு பவுலை எடுத்து எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் மூன்று ஸ்பூன் காய்ச்சாத பால், ஒரு சிட்டிகை அளவு கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையினை சருமத்தில் இப்பொழுது அப்ளை செய்து நன்றாக காயவிடுங்கள், பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இவற்றில் சேர்க்கப்பட்டுள்ள பால், கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் தேன் இவை மூன்று சருமத்தில் உள்ள அழுக்கினை நீக்குவதுடன், இயற்கையான முறையில் சருமத்தை என்றும் பளிச்சென்று வைத்து கொள்ளும்.