COVID-19 என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸ் உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்த பெருந்தொற்று நோய் உலகம முழுவம் சுமார் 14,500-த்திற்கும் அதிகமான உயிர்களை காவு வாங்கி யுள்ளதாக உலக சுகாதார அமைச்சக அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
உலகளவில் கடந்த மூன்று மாதங்களில் கொரோனா வைரஸால் சுமார் 2,94,110 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்தியாவில் இந்த வைரஸ் 400 பேரை தாக்கி யுள்ளது மற்றும் 7 பேர் இறந்துள்ளனர். இன்னும் இந்த வைரஸ் தாக்கத்திற்கு மக்கள் உள்ளாகிக் கொண்டிருக் கின்றனர்.
இந்த தொற்றின் தாக்கத்தில் மஹஇருந்து மீண்டவர்கள் இருந்த போதிலும், இதற்கு இன்னும் தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப் படாமல் இருப்பதால்,
மக்கள் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கை யுடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது, கொரோனா வைரஸ் வயதானவர் களுக்கும், உடல்நல பிரச்சனைகளைக் கொண்டவர் களுக்கும் ஆபத்தானதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதிலும் நுரையீரல் நோய், இதய நோய், சர்க்கரை நோயுடன் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளைக் கொண்டவர் களாக இருந்தால்,
இந்த வைரஸ் எளிதில் தாக்கி நிலைமையை மோசமாக்குவதோடு, சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கலாம்.
குறிப்பாக சர்க்கரை நோயாளி களுக்கு கொரோனா வைரஸ் பரவும் இந்த காலம் மிகவும் ஆபத்தான காலமாகும். உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, 2030 இல் இறப்புக்கு முக்கிய காரணமாக விளக்கும் நோய்களின் பட்டியலில் சர்க்கரை நோய் 7 ஆவது இடத்தில் இருக்கும். இதை விட மிகவும் ஆபத்தானது என்னவென்றால், அடுத்த 10 வருடங்களில் சர்க்கரை நோய் உள்ளவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துக் காணப்படும்.
உலகிலேயே சர்க்கரை நோயின் தலைநகராக இந்தியா உள்ளது. சர்வதேச நீரிழிவு அறக்கட்டளை யின் கூற்றுப்படி, இந்திய நாட்டில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மிகவும் ஆபத்தானது. இதை விட மிகவும் ஆபத்தானது என்னவென்றால், அடுத்த 10 வருடங்களில் சர்க்கரை நோய் உள்ளவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துக் காணப்படும்.
ஒரு நற்செய்தி என்னவென்றால், சரியான வாழ்க்கை முறை மாற்றங்களுடன் சர்க்கரை நோயைத் தடுக்கலாம்.
சரியான உணவு மற்றும் சுறுசுறுப்பாக இருப்பது போன்றவை இரத்த சர்க்கரை பராமரிப்பில் மிகவும் முக்கியமானவை.
இதை நினைவில் கொண்டு ஒருவர் நடந்து வந்தாலே, சர்க்கரை நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், உடலில் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கும்.
இதனால் உடலைத் தாக்கும் நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடுவது என்பது மிகவும் கடினமாக இருக்கும். அதிலும் உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகமாக இருந்தால், நீங்கள் சற்று அதிக முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாய்வழி மருந்து மாத்திரைகள் அல்லது இன்சுலின் ஊசியைப் போடுவதாக இருந்தால், உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை தினமும் தவறாமல் எடுக்க வேண்டும்.
கொரோனா பரவும் இந்த காலத்தில் எந்நேரம் வேண்டு மானாலும் கடைகளை மூடப்படலாம். எனவே மருந்து மாத்திரைகள் தீரும் முன் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதற்கு 2 மாதத்திற்கான மருந்து மாத்திரைகளை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.
சர்க்கரை நோயாளிகள் சரியான நேரத்தில் உணவுகளை உட்கொண்டு மருந்துகளை சரியான அளவில் எடுக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
இதன் மூலம் சிக்கல்களைத் தவிர்த்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கான அபாயத்தையும் குறைக்கலாம். கொரோனா வைரஸ் பரவும் இந்த தருணத்தில் வெளியே அதிகம் சுற்றக்கூடாது என்பதால், உங்கள் இரத்த சர்க்கரை அளவை நீங்களே ஒரு டைரியில் குறித்து வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
இதற்காக ஒவ்வொரு முறை இரத்த பரிசோதனையின் போது தெரிய வரும் இரத்த சர்க்கரை அளவீடுகளை டைரியில் தவறாமல் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதோடு உங்கள் மருத்துவரின் மொபைல் எண்ணையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
இதனால் திடீரென்று உங்கள் உடலில் ஏற்படும் பிரச்சனைக்கான காரணம் மற்றும் தீர்வை மருத்துவருக்கு போன் செய்து தெளிவுபடுத்திக் கொள்ளலாம். மேலே குறிப்பிட்டுள்ள நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர, மற்ற அனைவரும் பின்பற்றும் முன்னெச்சரிக்கை நடைமுறை களையும் பின்பற்ற வேண்டும்.
உங்கள் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரில் குறைந்தது 21 விநாடிகள் கழுவ வேண்டும். இதை அடிக்கடி செய்யுங்கள். இல்லாவிட்டால் சானிடைசரைப் பயன்படுத்தவும். நீங்கள் சந்தைக்குச் சென்றால் அல்லது நோய்வாய்ப்பட்ட நபரைப் பார்வையிட சென்றால் மறக்காமல் பாதுகாப்பு மாஸ்க்கை அணியுங்கள்.