ஒரே இரவில் கருவளையம் உடனே நீங்க டிப்ஸ்..! Dark circles under eye tamil…!

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

கருவளையம் நீங்க டிப்ஸ் / Dark circles under eye tamil: 1

கருவளையம் மறைய உருளைக்கிழங்கு ஒரு சிறந்த அழகு சாதன பொருள் என்று சொல்லலாம். இந்த உருளைக்கிழங்கை பயன்படுத்தி செய்யக்கூடிய அழகு குறிப்பு பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:-

  • உருளைக்கிழங்கு சாறு – 1 கப்
  • வெள்ளரிக்காய் சாறு – 1 கப்
  • கற்றாழை ஜெல் – 2 ஸ்பூன்

செய்முறை:-

சுத்தமான பவுல் ஒன்றை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு கப் உருளைக்கிழங்கு சாறு, ஒரு கப் வெள்ளரிக்காய் சாறு மற்றும் கற்றாழை ஜெல் இரண்டு ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பின் அவற்றில் காட்டன் பேட் (cotton pads) அல்லது காட்டன் பஞ்சினை ஊறவைத்து, பின் ப்ரிஜியில் 20 நிமிடங்கள் வைக்க வேண்டும்.

Dark circles under eye

பின் இரவு உறங்குவதற்கு முன் உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளரிக்காய் சாறில் ஊறவைத்த காட்டன் பேடை எடுத்து கருவளையம் உள்ள இடத்தில் அப்ளை செய்யுங்கள். பின் இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் கண்களில் அப்ளை செய்த காட்டன் பேடை அகற்ற வேண்டும்.

இந்த முறையை தொடர்ந்து ஒருவாரம் வரை செய்து வர ஒரே வாரத்தில் கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம் மறைய ஆரம்பிக்கும்.

கருவளையம் போவதற்கு என்ன செய்வது? | Turmeric face pack

Curd Face Pack

மஞ்சள் பொதுவாக சரும நிறத்தை அதிகரித்து காட்டும், அதேபோல் கண்களுக்கில் கீழ் உள்ள கருவளையம் மறைய பெரிதும் பயன்படுகிறது. எனவே கருவளையம் பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சளை பயன்படுத்தலாம்.

ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் இவை இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை கண்களுக்கில் கீழ் உள்ள கருவளையம் மீது நன்றாக அப்ளை செய்யுங்கள்.

பின் 15 நிமிடங்கள் காத்திருந்து கண்களை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் பின்பற்றி வர சில நாட்களிலேயே கருவளையம் மறைய ஆரம்பிக்கும்.

Dark circles under eye tamil – Coffee eye serum at home:-

கருவளையம் மறைய Coffee eye serum வீட்டில் மிக எளிமையான முறையில் எப்படி தயார் செய்யலாம் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:-

  1. காபி பவுடர் – ஒரு டேபிள் ஸ்பூன்
  2. பாதாம் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்
  3. விட்டமின் ஈ ஆயில் – ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை:-

மேல் கூறப்பட்டுள்ள மூன்று பொருட்களையும் ஒரு பாட்டிலில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள், பின் அந்த பாட்டிலை நன்றாக மூடி, ஒருவாரம் வரை ரூம் டெம்பரேச்சரில் வைத்திருக்க வேண்டும்.

பின் ஒருவாரம் கழித்து அந்த கலவையை எடுத்து நன்றாக வடிகட்டி மற்றொரு பாட்டிலில் தயாரித்த இந்த Coffee eye serum-ஐ ஊற்றி பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை:-  தயாரித்த இந்த Coffee eye serum-ஐ இரண்டு அல்லது மூன்று துளிகள் எடுத்து கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம் மீது அப்ளை செய்ய வேண்டும்.

பின் சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள், பிறகு 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர கருவளையம் மறைய ஆரம்பிக்கும்.

Related Posts

Leave a Comment

Translate »