தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு – 5 டேபிள்ஸ்பூன்
மாம்பழம் – 1
தயிர் – ஒரு கப்
உப்பு – ஒரு சிட்டிகை
பால் – கால் கப்.
செய்முறை:
மாம்பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். சிறிது மாம்பழ துண்டுகளை தனியாக எடுத்து வைக்கவும்.
ராகி மாவை ஒரு டம்ளர் நீரில் கரைத்து கொதிக்கவைத்து கஞ்சியாகத் தயார் செய்யவும்.
இதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கலக்கவும்.
மாம்பழத் துண்டுகள், தயிர், ஆறவைத்த ராகி கஞ்சி, பால் சேர்த்து மிக்ஸியில் அடித்து குளிரவைக்கவும்.
கண்ணாடி டம்ளரில் குளிர்ந்த கலவையை ஊற்றி மாம்பழத் துண்டுகள் சேர்த்துப் பரிமாறவும்.
சத்தான சுவையான கேழ்வரகு மாம்பழ ஸ்மூத்தி ரெடி.