முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்கும் வழிமுறை – Oily skin care tips…..!

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

முகம் பொலிவு பெற சீரம்:

முகத்தில் எண்ணெய் பசை நீங்கி (Oily skin care tips), முகம் என்றும் பொலிவுடன் இருக்க சீரம் தயாரிப்பது எப்படி என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  1. கற்றாழை ஜெல் – 2 ஸ்பூன்
  2. ரோஸ் வாட்டர் – 1 ஸ்பூன்
  3. டீ ட்ரீ ஆயில் – 5 துளிகள்
  4. Sage essential oil – 5 துளிகள்

செய்முறை:-

ஒரு சுத்தமான பாட்டில் ஒன்றை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில், மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக ஊற்றி கொள்ளுங்கள்.

பின் அந்த பாட்டிலை மூடி ஒருமுறை நன்றாக ஷேக் (Shaking) செய்ய வேண்டும்.

பின் இந்த கலவையை முகத்தில் ஒவ்வொரு துளிகளாக வைத்து வட்டம் (Circle) வடிவில் நன்றாக 5 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.

இந்த முறையை வாரத்தில் ஒரு முறை செய்து வர சருமத்தில் உள்ள அனைத்து எண்ணெய் பசைகளும் நீங்கி சருமம் என்றும் பொலிவுடன் காணப்படும்.

பயன்கள்:

கற்றாழை ஜெல்:-

கற்றாழை ஜெல் ஒரு சிறந்த அழகு சாதன பொருள் என்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும், கற்றாழை சருமத்தில் உள்ள அனைத்து இறந்த செல்களை நீக்கி சருமத்திற்கு என்றும் பொலிவினை கொடுக்கும்.

ரோஸ் வாட்டர்:-

ரோஸ் வாட்டர் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் வறட்சியினை நீக்கி சருமத்தை என்றும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். சரும நிறத்தை அதிகரிக்கும்.

டீ ட்ரீ ஆயில்:-

டீ ட்ரீ ஆயில் சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து சருமத்தை என்றும் பாதுகாக்கும் என்பதால் வறட்சியினால் ஏற்படும் சரும வெடிப்புகளை சரி செய்யும்.

Sage essential oil:-

Sage essential oil பொதுவாக குளிர்ச்சி தன்மை வாய்ந்தது என்பதால் சருமத்தில் ஏற்படும் வீக்கம், சிவப்பு தடிப்புகள் மற்றும் பலவகையான சரும பிரச்சனைகளிடமிருந்து நம் சருமத்தை பாதுகாக்கும்.

எனவே இந்த நான்கு பொருட்களையும் பயன்படுத்தி தயார் செய்த சீரம் சருமத்தில் பயன்படுத்தும் போது முகத்தில் வழியும் எண்ணெய் பசையினை நீக்கி சருமத்தை என்றும் பொலிவுடன் வைத்திருக்கும்.

சருமத்தில் எண்ணெய் வழியும் பிரச்சனை உள்ளவர்கள் செய்ய வேண்டிய மற்றும் செய்ய கூடாத சில விஷயங்கள்:

  1. முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் முகத்தை குளிர்ந்த நீரால் குறைந்தது 5 முறையாவது கழிவி கொண்டே இருக்க வேண்டும்.
  2. உணவில் எண்ணெய் அதிகம் சேர்த்து கொள்ளாதீர்கள், அதேபோல் எண்ணெய் செய்த உணவுகளை முற்றிலும் தவிர்த்து கொள்ளுங்கள்.
  3. முகத்திற்கு வாரத்தில் ஒரு முறையாவது ஏதாவது ஒரு பேஷியல் செய்யுங்கள்.
  4. அதேபோல் தினமும் ஏதாவது யோகாசனம் செய்யுங்கள்.
  5. முகத்திற்கு வாரத்தில் ஒரு முறை ஏதாவது skincare toner பயன்படுத்துங்கள்.

Related Posts

Leave a Comment

Translate »