முகம் பளபளக்க கோல்டன் ஃபேசியல்:
தேவையான பொருட்கள்:
- கடலை மாவு – 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
- தேன் – 2 ஸ்பூன்
- பாதாம் பவுடர் – 1 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
- சந்தன பவுடர் – 1 ஸ்பூன்
- பால் – சிறிதளவு
செய்முறை விளக்கம்:
கோல்டன் ஃபேசியல் செய்வதற்கு முதலில் சுத்தமான ஒரு பவுலில் கடலை மாவு 2 ஸ்பூன் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். அடுத்து மஞ்சள் தூள் 1 ஸ்பூன், தேன் 2 ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக பாதாம் பவுடர் 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு 2 ஸ்பூன் சேர்க்கவும். அதன் பிறகு சந்தன பவுடர் 1 ஸ்பூன், கடைசியாக எல்லாவற்றையும் மிக்ஸ் செய்வதற்கு சிறிதளவு பாலை சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது நன்றாக மிக்ஸ் செய்த பிறகு சருமத்தில், கழுத்து பின் பகுதிகளில் தடவி 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும். 20 நிமிடம் கழித்த பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். அவ்ளோதாங்க இந்த எளிமையான கோல்டன் ஃபேசியல். எல்லாரும் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க நல்ல மாற்றம் கிடைக்கும்.
சருமத்தை சுத்தம் செய்ய:
தேவையான பொருட்கள்:
- பால் – 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
முதலில் சருமத்தை சுத்தம் செய்ய 4 டேபிள் ஸ்பூன் அளவிற்கு காய்ச்சாத பாலை எடுத்து கொள்ள வேண்டும்.
அடுத்து காய்ச்சாத பாலில் பஞ்சை நனைத்து முகத்தில் மசாஜ் போல் செய்ய வேண்டும்.
பஞ்சால் முகத்தில் மசாஜ் செய்த பிறகு ஈரம் உள்ள கைக்குட்டை அல்லது டிஸ்யூ பேப்பரால் முகத்தை இப்போது துடைக்க வேண்டும்.
முகத்தில் ஃபேஸ் ஸ்க்ரப் செய்ய:
தேவையான பொருட்கள்:
- எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
- சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்
- தேன் – 1/2 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
முதலில் எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். அடுத்து எலுமிச்சை சாறுடன் சர்க்கரை 1 டேபிள் ஸ்பூன் சேர்க்கவும்.
சருமத்தில் மசாஜ் செய்ய கிரீம்:
தேவையான பொருட்கள்:
- கற்றாழை ஜெல் – 2 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
- ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
இப்போது முகத்தை மசாஜ் செய்ய கற்றாழை ஜெல்லை 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும்.
அடுத்ததாக எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் ஆயில் 1 டேபிள் ஸ்பூன் எடுத்து கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.
அடுத்து நன்றாக கலந்து வைத்த கலவையை முகத்தில் 10 நிமிடம் தொடர்ச்சியாக மசாஜ் போல் செய்ய வேண்டும்.
மசாஜ் செய்த பிறகு முகத்தினை பஞ்சால் வைத்து துடைக்க வேண்டும்.
முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் செய்ய:
தேவையான பொருட்கள்:
- மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
- கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
- பால் – 2 டேபிள் ஸ்பூன்
- ரோஸ் வாட்டர் – 1 டேபிள் ஸ்பூன்
- தேன் – 1 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் செய்ய முதலில் மஞ்சள் தூளை 1/4 டீஸ்பூன் அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
மஞ்சள் தூளுடன் கடலை மாவு, பால் 2 டேபிள் ஸ்பூன் அளவு சேர்த்து கொள்ள வேண்டும்.
அதன்பிறகு சேர்க்க வேண்டியவை ரோஸ் வாட்டர் 1 டேபிள் ஸ்பூன், தேன் 1 டீஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். முகம் எப்போதும் எண்ணெய் பசை உள்ளவர்கள் தேனை சேர்க்காமல் கூட இருக்கலாம்.
இப்போது பேஸ்டை முகத்தில் 20 நிமிடம் தடவி ஊறவைக்க வேண்டும். நன்றாக முகத்தில் ஊறிய பிறகு தண்ணீரால் வாஷ் செய்து கொள்ளலாம்.
அவ்ளோதாங்க வீட்டிலே இருந்து பார்லர் போகாமல் கோல்டு பேஷியல் செய்முறைகள். இதை எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க நல்ல மாற்றம் முகத்தில் தெரியும்.