சேமிப்பை போல் காப்பீடும் அவசியம்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

இன்சூரன்ஸ் எனப்படும் காப்பீடு இன்று அனைத்து பொருட்களையும் காப்பீடு செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளது. வெளிநாடு செல்ல வேண்டியிருந்தாலும் மருத்துவ காப்பீடு கட்டாயமாகி விட்டது. விலை உயர்ந்த மொபைல் போன் உபயோகிக்கும் நாம் அதையும் காப்பீடு செய்கிறோம். தனி நபர் காப்பீடு மற்றும் உபயோகிக்கும் இரு சக்கர வாகனம், கார், வசிக்கும் வீடு உள்ளிட்டவற்றையும் காப்பீடு செய்யலாம். குடும்பத்தின் வருமானம் ஈட்டுவோர் திடீரென இறந்துவிட்டால், அவரைச் சார்ந்த குடும்பத்தினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் காப்பீட்டு தொகை உதவும்.

பொருட்களின் மீதான காப்பீடு ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டியது. இதற்கு செலுத்தும் பிரீமியம் திரும்ப தரப்பட மாட்டாது. ஆனால் எந்த பொருள் எவ்வளவு தொகைக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளதோ அந்த தொகையை இழப்பீடாக பெறலாம். பொருளுக்கு சேதம் ஏற்பட்டாலோ, தொலைந்து போனாலோ, தீ விபத்தில் சேதமடைந்தாலோ இழப்பீட்டை பெறலாம்.

இதேபோல மருத்துவக் காப்பீடும் உள்ளது. ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். நோய் வாய்ப்பட்டு மருத்துவ சிகிச்சை செய்ய நேரிட்டால் அப்போது மருத்துவ காப்பீட்டை பயன்படுத்திக் கொள்ளலாம். விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம். வறட்சி, வெள்ளத்தால் பாதிக்கப்படும்போது பயிர் காப்பீடு மூலம் இழப்பீடு பெறலாம். பொதுவாக அனைத்து காப்பீட்டு பிரீமியங்களுக்கும் வருமான வரி விலக்கு உண்டு. வாழ்வில் சேமிப்பு எந்த அளவுக்கு அவசியமோ அதே அளவுக்கு காப்பீடும் அவசியமாகி விட்டது.

Related Posts

Leave a Comment

Translate »