மனச்சோர்வும்… உணவுபழக்கமும்…

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

மனச்சோர்வை ஆரம்ப நிலையிலேயே கவனத்தில் கொள்ளாவிட்டால் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். நல்ல உணவு பழக்கத்தை பின்பற்றிவந்தால் உற்சாக மனநிலைக்கு திரும்பிவிடலாம்.

* “நீங்கள் மனச்சோர்வைத் தவிர்க்க விரும்பினால் உங்களை பிஸியாக வைத்திருங்கள். என்னைப் பொறுத்தவரை, செயலற்ற நிலையில் சோம்பேறியாக இருப்பதுதான் மனச்சோர்வுக்கு முதல் எதிரி” என்கிறார் உலக புகழ் பெற்ற எழுத்தாளர் மாட் லூகாஸ்.

* பெர்ரி பழங்கள் ஆன்டி ஆக்சிடென்டுகளாக செயல்பட்டு மன நிலையை மேம்படுத்த உதவும். ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி, கிரான்பெர்ரி, ப்ளாக்பெர்ரி அனைத்தும் வைட்டமின் சி நிறைந்தவை. அவை மன அழுத்த அளவை குறைப்பதோடு மற்ற நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளன. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மனச்சோர்வை விலக்கி வைத்துவிடலாம்.

* ஊட்டச்சத்துக்களை முறையாக உள்ளடக்கி இருக்கும் பச்சை இலை காய்கறிகளை சாப்பிடுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அவை வைட்டமின் பி, பி 6 போன்ற பல வைட்டமின்கள் நிறைந் தவை. கீரை, பிராக்கோலி, காலே, முட்டைக்கோஸ் போன்றவற்றை சாப்பிடுவது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும். போலேட், பைபர் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை கொண்ட கீரைவகைகளையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

* மனச்சோர்வுடன் போராடிக்கொண்டிருந்தால் ஆளிவிதை, சியா விதைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அவற்றில் ஒமேகா 3 கொழுப்புகள் நிறைந்திருக்கின்றன. மீன்களிலும் கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதச்சத்து அதிகம் இருக்கிறது. சால்மன், மத்தி, டுனா, பாய்மர மீன், கானாங்கெளுத்தி போன்ற மீன் வகைகள் மன அழுத்த அளவை குறைக்க உதவும். இதய நோய்களின் அபாயத்தில் இருந்தும் விடுபட செய்துவிடும்.

* முட்டையில் புரதங்கள், துத்தநாகம், வைட்டமின்கள் பி மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் அவை உடல் ஆற்றலை அதிகரிக்க துணைபுரியும். தினமும் காலை உணவுடன் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லது. பாலுடன் சேர்த்தும் உட்கொள்ளலாம்.

* காளான்களும் மனச்சோர்வுக்கு இடமில்லாமல் செய்துவிடும். அதில் இருக்கும் ரசாயன பண்புகள் சர்க்கரை அளவையும் குறைக்க உதவும்.

* ‘வால்நெட்’ ஒட்டுமொத்த மூளை ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதாக அறியப்படுகிறது. இதில் ஒமேகா 3 அமிலம் அதிகம் உள்ளது. மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவை ஆரோக்கியமான சமநிலையில் வைத்திருக்க உதவும் புரதத்தையும் அதிகம் கொண்டது. கால் கப் வால்நட் சாப்பிட்டால் மன அழுத்தம் 26 சதவீதம் குறைவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய தலைமுறையினர் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகளுள் ஒன்றாக மனச்சோர்வு அமைந்திருக்கிறது. அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஆரம்ப நிலையிலேயே கவனத்தில் கொள்ளாவிட்டால் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் மனச்சோர்வுக்கு இலக்காகிறார்கள். இதற்கு குறிப்பிட்ட சிகிச்சை என்று எதுவும் இல்லை. நல்ல உணவு பழக்கத்தை பின்பற்றிவந்தால் உற்சாக மனநிலைக்கு திரும்பிவிடலாம். 

Related Posts

Leave a Comment

Translate »