Potato cutlet ingredients – தேவையான பொருட்கள்:-
- உருளைக்கிழங்கு – 1/2 கிலோ
- கடலை மாவு – 1 1/2 ஸ்பூன்
- அரிசி மாவு – 1 1/2 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் – பொடிதாக நறுக்கியது ஒரு கப்
- பச்சைமிளகாய் – 1 பொடிதாக நறுக்கியது
- கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடியளவு
- கருவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு
- மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
- கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – 1/2 லிட்டர்
- பிரட் துகள்கள் – ஒரு கப்
உருளைக்கிழங்கு கட்லெட் செய்முறை..! Potato Cutlet Recipe in Tamil..!
ஸ்டேப்: 1
முதலில் உருளைக்கிழங்கினை நன்றாக சுத்தம் செய்து பின் குக்கரில் 3 விசில் வரும் வரை வேகவைக்க வேண்டும்.
பின் உருளைக்கிழங்கு வெந்ததும் அவற்றில் உள்ள தோலினை உரித்து, நன்றாக மசித்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 2
அதன் பிறகு மசித்த உருளைக்கிழங்குடன் ஒரு கப் பொடிதாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடிதாக நறுக்கிய ஒரு பச்சைமிளகாய், ஒரு கையளவு கருவேப்பிலை, ஒரு கையளவு கொத்தமல்லி, 1 1/2 ஸ்பூன் கடலை மாவு, 1 1/2 ஸ்பூன் அரிசி மாவு, 1/2 ஸ்பூன் கரம் மசாலா, 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 3
அனைத்து பொருள்களையும் நன்றாக பிசைந்த பின் இரண்டு ஸ்பூன் எண்ணெயை கலவையில் சேர்த்து திரும்பவும் மாவினை நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.
இப்பொழுது உருளைக்கிழங்கு கட்லெட் செய்வற்கு மாவு தயார் இந்த மாவினை சிறு சிறு உருண்டையாக உருட்டி லேசாக தட்டி கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 4
பிறகு பிரட் துகள்களில் தட்டி வைத்துள்ள மாவினை நன்றாக பிரட்டி ஒரு தட்டில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 5
பிறகு அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து அவற்றில் 50 மில்லி எண்ணெயினை ஊற்றி நன்றாக சூடுப்படுத்தவும். எண்ணெய் நன்றாக சூடேறியதும் பிரட் துகள்களில் பிரட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு கட்லெட்டினை தோசை கடாயில் போட்டு பொன்னிறமாக வரும் வரை பொரித்தெடுக்க வேண்டும்.
இப்பொழுது சுவையான உருளைக்கிழங்கு கட்லெட் தயார். மேல் கூறப்பட்டுள்ள முறை படி உருளைக்கிழங்கு கட்லெட்டினை செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் ஒருமுறை தங்கள் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்.