பெண்கள் ‘உயர்கிறார்கள்’

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

இந்தியாவில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, பெண் கல்வியறிவு விகிதம் மேம்பாடு அடைந்துள்ளது சர்வேயில் தெரியவந்துள்ளது. 2016-ம் ஆண்டில் 15 முதல் 45 வயது வரை உள்ள பெண்களின் சராசரி கல்வியறிவு 84.8 சதவீதமாக இருந்தது. அது 2018-ம் ஆண்டு 87 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் 2018-ம் ஆண்டில் 12.5 சதவீதம் பெண்கள் பள்ளிப்படிப்பை பூர்த்தி செய்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டில் 12 சதவீத பெண்கள்தான் பள்ளிப்படிப்பை நிறைவு செய்திருந்தார்கள்.

ஒட்டுமொத்தமாக பெண் கல்வியறிவு அதிகம் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் கேரள மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. அங்கு கல்வியறிவு பெற்ற பெண்களின் சதவீதம் 99.5 சதவீதமாக இருக்கிறது. 2017-ம் ஆண்டில் பெண்களின் கல்வியறிவு 99.3 சதவீதமாக இருந்தது. தனது சொந்த சாதனையை தானே முறியடித்து கேரளா முதலிடத்தை தக்கவைத்திருக்கிறது.

பெண் கல்வியறிவு விகிதத்தை மேம்படுத்துவதில் கேரளா, இமாச்சல பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களை வகிக்கின்றன. இமாச்சல பிரதேசத்தில் பெண் கல்வியறிவு விகிதம் 98.8 சதவீதமாக நீடிக்கிறது. தமிழ்நாட்டில் பெண் கல்வியறிவு விகிதம் 2017-ம் ஆண்டு 96.2 சதவீதமாக இருந்தது. அது 2018-ம் ஆண்டில் 0.6 சதவீதம் உயர்ந்து 96.8 சதவீதமாக இருக்கிறது.

பெண் கல்வியறிவு விகிதத்தில் மிகவும் பின் தங்கி இருக்கும் மாநிலங்கள் பட்டியலில் பீகார், ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன. பீகாரில் பெண் கல்வியறிவு விகிதம் 2016-ம் ஆண்டு 28.3 சதவீதமாக இருந்தது. அது 2018-ம் ஆண்டு 23.5 சதவீதமாக குறைந்திருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெண் கல்வியறிவு விகிதம் 25 சதவீதத்தில் இருந்து 22.6 சதவீதமாகவும், ராஜஸ்தான் மாநிலத்தில் 20 சதவீதமாகவும் குறைந்திருக்கின்றன.

Related Posts

Leave a Comment

Translate »