விரல் ரேகை முத்திரை – நோய் தீர்க்கும் மருந்து

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

விரல்களின் நுனியில் நான்கு வடிவங்களுடன் கூடிய மேடுபள்ளம் நிறைந்த ரேகைகள் உள்ளன. தனித்தனியாக உள்ள பத்து விரல்களையும் முறைப்படி தொடுவது முத்திரை ஆகும். இந்த முத்திரைகளை சரிவர ஒன்று சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் உடல் வியாதிகள் அனைத்தையும் குணமாக்கலாம். நீடூழி வாழலாம். விரல் ரேகைகள் தெய்வத்தன்மை கொண்டது. இந்த முத்திரை மனிதகுலம் தோன்றிய நாள் முதல் செயல்பாட்டில் உள்ளது. கோவில்களில் உள்ள சிலைகளில் ‘அபயஹஸ்தம்’ ரகசியம் உள்ளது. அவ்வாறே விரல்களை நம் உடலின் முன் பக்கம் ஏந்தி இறைவன் அருளை வேண்டும் போது உடலில் மின்சாரம் மற்றும் காந்த சக்தி பாயும். இவ்வாறாக மனஅமைதி, சமாதானம் ஏற்படும். இந்த விரல்ரேகை முத்திரை பயிற்சியையும், பயன்பாட்டையும் சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள் மூலமாக மனிதகுலம் இறக்குமதி செய்து கொண்டது. தியானம், பிராணாயாமம் அதிகரிக்க முத்திரைகள் அவசியம். மேலும், சிறந்த ஆசனங்களை அமைத்துக் கொண்டு செய்யும் போது மன அமைதி ஏற்படுகிறது. மனம் தீயவழியில் செல்லாமல் மரணமிலாப் பெருவாழ்வு அடையலாம். வாழ்க்கை மிகச் சிறியது என்பதால் அன்பை அதிகமாகவும், கோபங்களை கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக்கொள்ள விரல் ரேகையின் முத்திரை பயிற்சி பயன்படுகிறது.

அசம்யுக்தா, சம்யுக்தா என்னும் நாட்டிய முத்திரையில் முறையே 24 மற்றும் 13 முத்திரைகள் உள்ளன. இந்த முறையில் விரல் ரேகைகளை ஒவ்வொரு விதத்திலும் கைவிரல்களின் அழியாத் தன்மைகொண்ட ‘ரிட்ஜஸ்’ என்னும் மேட்டுப்பகுதி ஒன்றை ஒன்று தொடும்போது உடலில் மின்சாரம் பாய்ந்து காந்த சக்தி ஏற்படுகிறது. இதன் காரணமாக வெகுநேரம் நாட்டியமாடினாலும், தியானம் செய்தாலும் உடல் சோர்வு ஏற்படுவதில்லை.

மின் இணைப்பில், பாசிடிவ், நெகடிவ் இரண்டும் தொட்டாலே மின்சாரம் ஏற்படுவது போல் மேட்டுப் பகுதியான ரிட்ஜஸை மெதுவாக தொட்டால் போதும் அழுத்தம் தர வேண்டியதில்லை. இந்த முத்திரைகளை முறையாக பயன்படுத்தினால் உடலிலுள்ள நோய்கள் குணமாகும். சக்தி அதிகரிக்கும். மருந்துகள் உபயோகிக்கவேண்டிய அவசியம் இல்லை. நாமே எளிதாக கற்றுக்கொண்டு செயல்படுத்தி பூரணகுணமடையலாம். தற்காலத்தில் குழந்தைகள் பெரிய அளவில் நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அவற்றிற்கு இந்த விரல்ரேகைகளை தொட்டு முத்திரை பயிற்சி தொடர்ந்து செய்தால் பூரண குணம் கிடைக்கும்.

இந்த முத்திரை பயிற்சியை எந்த நேரத்திலும் எந்த நிலையிலும் செய்யலாம். நீண்ட கால நோயுள்ளவர்கள் ஒன்று அல்லது இரண்டு முத்திரையை நிரந்தரமாக செய்யும் போது, மூளையின் சம்பந்தப்பட்ட பகுதியில் தூண்டுதல் ஏற்படுகிறது. இது விஞ்ஞான பூர்வமான உண்மை. இத்துடன் மெல்லிய இசையை கேட்டுக்கொண்டு மூச்சுப்பயிற்சியும் மேற்கொண்டால் பூரண குணம் உண்டாகும். பிராணாயாமம் செய்யும்போது கைவிரல் ரேகைகள் காந்த சக்தி பெறுகிறது. அத்துடன் முத்திரை பயிற்சி செய்தால் பூரண பலன் கிடைக்கும். இந்தவிரல் நுனியில் நான்கு பிரதான வடிவங்கள் உள்ளன. இவைதான் மகா விஷ்ணுவின் கையிலிருக்கும் சக்கர, லாட, வில், மற்ற வடிவங்கள். விரல்ரேகை மேல் உள்ள ரிட்ஜஸ் எனப்படும் மேடு போன்ற பகுதிக்கும் பிராணிக்ஹீலிங்ஸ் மற்றும் ’ரெய்கி’ என்ற சிகிச்சை முறைக்கும் தொடர்பு உள்ளது. கைவிரல் ரேகைகளை கண் முன்னால், முகத்தின் முன்னே வைத்துக்கொண்டு பிராணாயாமம் செய்யும்போது விரல்களில் இருந்து ஒருவித காந்தசக்தி உண்டாகும். இந்த காந்த சக்தி மற்றும் மெல்லிய மின்சார அதிர்வுகள் நம் உடலில் உணரப்படும்போது நாம் பிறருக்கு நன்மைக்காகவும், குணமடையவும் பிரார்த்தனை செய்யும் போது அது பலனளிக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

மூளையில் இருந்து புறப்படும் இந்த தூய எண்ணங்கள் தண்டுவடம் வழியே நரம்புகளில் பரவி விரல் நுனிகளில் முடிவடைகிறது. அப்பொழுது ஏற்படும் நம் தூய்மையான எண்ணங்களுக்கு பலன் கிடைக்கிறது.

நமது கட்டைவிரல் தெய்வ சக்தியையும், ஆள்காட்டி விரல் மனித சக்தியையும் குறிக்கிறது. இதைத்தான் கண்ணதாசன் பாடலில் ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’ என்று பாடினார் சின் முத்திரையில் இவை ஒன்று சேர்த்து காண்பிக்கப்படுகின்றன. ஐந்து விரல்களும் பஞ்சபூதத்தின் அடையாளங்கள். கட்டைவிரல் நெருப்பு சக்தி கொண்டது. மற்ற விரல்களை பாதுகாக்கிறது. உடலில் குறிப்பிட்ட வெப்பத்தை தக்கவைக்க இந்த விரல் பயன்படுகிறது.

அதேபோன்று நமது ஆள்காட்டி விரல் பஞ்சபூதத்தில் காற்று தன்மைகொண்டது. காற்றுபோன்று எண்ணங்களை பிரதிபலிக்கிறது. ஆள்காட்டி விரலில் நுனி அசைவுக்கேற்ப சில விபரீதங்களுக்கும் காரணமாகிறது. மன அமைதிக்கும் அதே சமயம் பிறர் மன அமைதியின்மைக்கும் காரணமாகிறது. ஆகவேதான் ஆள்காட்டி விரலை காட்டி பேசுவதை தவிர்க்கச் சொல்கிறார்கள். நடுவிரல் ஆகாயதத்துவம் கொண்டது. அளவில் பெரிய நீளமான வடிவம் கொண்டது. மோதிர விரல் பஞ்சபூதத்தில் மண் சக்தி கொண்டது. இது புனிதமான விரலாகவும் இரு மனங்களை ஒன்று சேர்க்கும் திருமணத்திற்கு மோதிரம் அணிய இந்த விரல் காரணமாகிறது. சுண்டுவிரல் நீர் தத்துவம் கொண்டது. உடலில் இருக்கும் நீர் சக்தியை பாதுகாக்க பயன்படுகிறது.

பிறருக்கு வணக்கம் சொல்லும்போது இந்த விரல்தான் முன்னால் நின்று நீர் போன்று இதயத்தில் குளிர்ச்சியை இரு மனங்களிலும் ஒற்றுமை ஏற்படுத்துகிறது. விரல் நுனிகளில் உள்ள வடிவங்களை தாங்கிய ரேகைகள் புனிதத்தன்மை கொண்டது. மேலும் சரியான முத்திரைகளை விரல்களில் பயன்படுத்தினால் சைனஸ் குறைபாடுகள் முகத்திலுள்ள குறைபாடுகள் நீங்கும். இதன் அடிப்படையில் தான் ஒருவர் கைவிரல்களை நம் கைவிரல்களுடன் சேர்த்து கெஞ்சுவது, கைகுலுக்குவது போன்றவை இருவருக்கும் மனரீதியான அமைதியை தருகிறது. இந்த தொடு உணர்ச்சி, அழுத்தம் போன்றவை பெரிய நபர்களுக்கிடையே நன்மையை செய்கிறது.

மேற்கண்ட விரல் மேல் தோலில் உள்ள மேடான ரிட்ஜஸ் என்னும் கோடுகளை முறைப்படி தொட்டு பயிற்சி செய்வது முத்திரை ஆகும். சின் முத்திரை, தியானமுத்திரை, ஞான முத்திரை, வாயு முத்திரை, ஆகாய முத்திரை, நில முத்திரை, சூர்யமுத்திரை, வருண் முத்திரை, நீர் முத்திரை, அபான முத்திரை, பிராண முத்திரை, லிங்க முத்திரை, சங்கு முத்திரை, குபேர முத்திரை, கருட முத்திரை முஷ்டிமுத்திரை, மீன் முத்திரை, புத்த முத்திரை, யோனி முத்திரை போன்ற குறிப்பான சிலமுத்திரைகள் மூலமாக முறைப்படி தொட்டு பிராணாயாமம் செய்து கொண்டு தியானம் செய்யும் போது உடலின் சகல வியாதிகளுக்கும் நிவாரணம் பெற்று நீடூழிவாழலாம். மன அமைதி, உடல் சுறுசுறுப்பும் ஏற்படுகிறது. மரணமிலா வாழலாம் பெருவாழ்வை அடையலாம்.

Related Posts

Leave a Comment

Translate »