தேவையான பொருட்கள் :
சர்க்கரைவள்ளிக் கிழங்கு – ஒன்று
பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் – தேவையான அளவு
காய்ச்சி ஆறவைத்த பால் – 200 மில்லி
நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவு
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு.
செய்முறை:
சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்துத் தோல் நீக்கி துருவி கொள்ளவும்.
பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்துப் பொடிக்கவும்.
அதனுடன் துருவிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு சேர்த்து அரைத்தெடுக்கவும்.
அடுத்து அதில் பால், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் நுரை பொங்க அடித்துப் பரிமாறவும்.
குறிப்பு: இதைக் குளிரவைத்தும் பரிமாறலாம்.