சுவரில் குழந்தைகள் வரைந்த கிறுக்கல்களை அகற்ற என்ன செய்யலாம்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

வீட்டிலேயே முடங்கி கிடக்கும் குழந்தைகள்.. வீட்டு சுவர் முழுக்க பென்சிலால் எழுதி கிறுக்கி தள்ளிவிட்டார்களா… கவலையை விடுங்க.. கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த முறைகளை பின்பற்றி தீர்வு காணலாம்.

பேக்கிங் சோடா வீட்டை சுத்தம் செய்ய உதவும் நண்பன் எனலாம். அந்தவகையில் சுவர் கறைகளை அகற்ற பேக்கிங் சோடாவைத் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்தில் கரைக்கவும். பல் துலக்கும் பிரெஷ் பயன்படுத்தி பேக்கிங் சோடா பேஸ்ட் தொட்டு கறை உள்ள பகுதிகளைத் தேய்த்தால் கறைகள் முற்றிலுமாக அகலும்.

ஒரு மூடி வினிகரை ஒரு பவுல் வெதுவெதுப்பான நீரில் கலந்து அந்த தண்ணீரை பஞ்சு தொட்டு கறை படிந்துள்ள பகுதிகளில் துடைத்தால் கறைகள் நீங்கும். தெளிவாக கறைகள் நீங்கவில்லை எனில் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் வினிகரை நேரடியாகத் தொட்டு தேய்த்தால் நீங்கும். காற்று புகும் வசதி இருப்பின் ஜன்னல்களை திறந்து வைத்தால் வெயில் பட்டு கறை நீங்கும்.

போரக்ஸ் பவுடர் ஆற்றல் அதிகம் என்பதால் கவனமாகக் கையாளவும். போரக்ஸ் பவுடரை தண்ணீர்ல் கெட்டியான பேஸ்டாக கலந்துகொள்ளவும். பின் கறை படிந்துள்ள இடத்தில் தேய்த்து கழுவவும்.

சுற்றி உள்ள க்ரயான்ஸ், பென்சில் கறைகளுக்கு டூத்பேஸ்ட் பெஸ்ட் தீர்வு. பேஸ்டை தண்ணீரில் கெட்டியாகக் கரைத்து பிரெஷ் கொண்டு கறை படிந்த இடத்தில் தேய்க்க கறைகள் நீங்கும்.

பேக்கிங் சோடாவைக் காட்டிலும் வாஷிங் சோடா கூடுதல் ஆற்றல் நிறைந்தது. இதையும் கெட்டிப் பதத்தில் தண்ணீரில் கரைத்து அழுக்கு படிந்துள்ள இடங்களில் தேயுங்கள். பின் 10 நிமிடங்கள் ஊற வைத்து பிரெஷ் கொண்டு தேய்த்தால் கறை முற்றிலும் போய்விடும்.

Related Posts

Leave a Comment

Translate »