முட்டையை தினமும் வேகவைத்து தான் சாப்பிட வேண்டும். சரி வாங்க நண்பர்களே இப்போது காலையில் வேக வைத்த முட்டையை சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்..!
கல்லீரலை பாதுகாக்கும் முட்டை:
நமது உடலில் மிகப்பெரிய பகுதியானது கல்லீரல். கல்லீரலில் அதிகமாக நச்சுத்தன்மை சேர்ந்துவிடும். இந்த நச்சுத்தன்மை சேருவதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்பட கூடும். இதை தவிர்க்க காலையில் வெறும் வயிற்றில் இருக்கும்போது வேக வைத்த முட்டையை 1 வாரத்திற்கு சாப்பிட்டு வந்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.
குழந்தையின்மை நீங்க:
பலர் குழந்தை இல்லாத காரணத்தால் மிகவும் வருத்தம் அடைவார்கள். குழந்தையின்மை உள்ளவர்களுக்கு உடலில் தேவைப்படும் அளவிற்கு வைட்டமின் சத்துக்கள் குறைவாக இருப்பதால் இந்த குழந்தையின்மை வர காரணமாக உள்ளது.
இதனை நிரந்தரமாக தவிர்க்க தம்பதியினர்கள் காலையில் வெறும் வயிற்றில் வேகவைத்த முட்டையை சாப்பிட்டு வந்தால் ஹார்மோன்கள் பி9 அதிகரித்துவிடும். இதனால் குழந்தையின்மை விரைவில் நீங்கிவிடும்.
புற்றுநோயை தடுக்கும்:
வேகவைத்த முட்டையை தினமும் நாம் எடுத்துக்கொண்டால் புற்றுநோயை தடுக்கக்கூடிய செல்கள் நமது உடலில் அதிகமாக உருவாகிறது. பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை தடுக்கும் இந்த வேகவைத்த முட்டை.
மூளை திறனை அதிகரிக்க:
தினமும் வேகவைத்த முட்டையை சாப்பிட்டு வருவதால் நமது மூளையானது வேகமாக செயல்பட ஆரம்பித்துவிடும். குறிப்பாக படிக்கும் மாணவர்களுக்கு வேகவைத்த முட்டை கொடுப்பதால் ஞாபக சக்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதய நோய்களை தடுக்க:
நம் உடல் இரத்தத்தில் அதிகமாக சேர்ந்து இருக்கும் தேவையில்லாத கொலெஸ்ட்ரால்களை குறைக்க வேண்டுமென்றால் வேகவைத்த முட்டையை தினமும் எடுத்து வந்தால் நமது உடல் நல்ல மாற்றம் கிடைக்கும். முட்டையில் இருக்கக்கூடிய omega 3, fatty acid உடல் மற்றும் இதயத்திற்கு மிகவும் பாதுகாப்பு அளிக்கக்கூடிய ஒன்றாகும்.
இதயத்தை பாதுகாப்பாக வைத்திருக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக வேகவைத்த முட்டையை தினமும் சாப்பிட்டுவந்தால் இது போன்ற நோய்கள் விரைவில் குணமாகும். வேகவைத்த முட்டை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் அடங்கியுள்ளன. உடலை பாதுகாப்பாக வைத்திருக்க இதனை தவறாமல் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்றாகும்.