நாவல் பழம் நன்மைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு..?

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

நாவல் பழம் பயன்கள் (Jamun Fruit Benefits):

  • நாவல்பழம் அதிகம் கால்சியம் உள்ளது தினமும் நாவல்பழத்தை சாப்பிட்டால் எலும்பு பலமாக இருக்கும்.
  • வைட்டமின் பி1, பி2, பி5 ஆகிய சத்துக்கள் அதிகமாக இருக்கிறது ஆகையால் உடலுக்கு அதிக ஊட்டச்சத்தை அளிக்கிறது.
  • தோள்களில் ஏற்படும் சுருக்கங்களைத் தடுக்கும்.
  • வாய் முதல் குடல் வரை உள்ள புண்களை குணப்படுத்தும்.
  • பசியைத் தூண்டக்கூடியது.
  • கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்களை தடுக்கும் அரும் மருந்து.
  • நாவல்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடென்ட் அதிகமாக உள்ளது.
  • நாவல்பழத்தை சாப்பிடுவதால் ரத்தம் விருத்தி அடைகிறது.
  • வெண்புள்ளி, அரிப்பு நோய்களை விரைவாக சரிசெய்யும் தன்மை நாவல்பழத்திற்கு உள்ளது.
  • மலச்சிக்கல் பிரச்சனையா? அப்படியானால் நாவல் பழத்தினால் செய்யப்பட்ட வினிகரை சரிசமமாக நீரில் கலந்து கொண்டு, தினமும் இரண்டு முறை குடியுங்கள். இல்லாவிட்டால் நாவல் பழத்தினை உட்கொள்ளுங்கள். மலச்சிக்கல் பிரச்சனை உடனே சரியாகும்.
  • அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள், நாவல் பழத்தில் ப்ளாக் சால்ட் மற்றும் சீரகப் பொடி சேர்த்து சாப்பிட அசிடிட்டி பிரச்சனை உடனே சரியாகும்.
  • பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக, வைட்டமின் ஈ தேவை. நாவல் மரத்தின் இலையின் சாற்றை கஷாயமாக்கித் தேன் அல்லது வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் மலட்டுத் தன்மை அகலும்.
  • நாவல் பழத்தினை (naval palam benefits) அளவாக சாப்பிட்டு வந்தால், இவை தமனிகளில் ஏற்படும் பிரச்சனைகளை குறைத்து, மாரடைப்பு வருவதைக் குறைக்கும்.

இரத்த சர்க்கரையின் அளவை குறைக்கும்:

1. நாவல் பழம் நன்மைகள் (naval palam benefits): ஆன்டிபயாடிக் பண்புகள் நிறைந்த பழம். இதனை தினமும் உண்டு வரும்போது உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும். மேலும் உங்களுக்கு சர்க்கரை நோய் வராமல் காக்கின்றது.

அதிக அளவு நார்ச்சத்து:

2. நாவல் பழம் நன்மைகள் (naval palam benefits): நாவல் பழத்தில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உங்கள் உடலுக்கு பலவித நன்மைகள் அளிக்க கூடிய ஒன்று ஆகும். எனவே நாவல் பழத்தினை உங்கள் உணவில் சேர்த்து வாருங்கள் நண்பர்களே.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க:

3. நாவல் பழம் நன்மைகள் (naval palam benefits): நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நினைப்பவர்கள் தினமும் அதிகளவு நாவல் பழத்தை (jamun fruit benefits) உட்கொள்வது மிகவும் நல்லது. நாவல் பழத்தில் வைட்டமின் சி மற்றும் பலவித வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே தினமும் உட்கொண்டு வந்தால் உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையும். மேலும் உங்களுக்கு நோய் வராமல் காக்க உதவும்.

புற்று நோயினை தடுக்க உதவும்:

4. நாவல் பழம் நன்மைகள் (naval palam benefits): நாவல் பழத்தில் (naval palam benefits) அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளது. இது உங்களுக்கு புற்று நோய் வராமல் காக்க உதவுகின்றது.

தினமும் நாவல் பழம் உண்பவர்களுக்கு 30 சதவீதம் புற்று ஏற்படுவது குறைவு என பலவித ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வளவு நன்மைகள் நாவல் பழத்தில் உள்ளதால் அதனை தினமும் உண்டு வாருங்கள் உறவுகளே.

எலும்புகள் வலிமை பெற:

5. நாவல் பழம் நன்மைகள் (naval palam benefits): நாவல் பழத்தில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. உங்கள் உணவுகளில் உள்ள கால்சியம் சத்தினை உறிஞ்சுவதற்கு மெக்னீசியம் மிகவும் உதவியாக இருக்கும். எனவே எலும்புகளின் வலிமையினை அதிகரிக்க தினமும் நாவல் பழத்தினை (jamun fruit benefits) உண்டு வாருங்கள் நண்பர்களே.

குறிப்பு:

  • நாவல்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்த்து கொள்ளவும்.
  • அதேபோல் நாவல் பழம் சாப்பிட்ட உடனே பால் அருந்த கூடாது.
  • முக்கியமாக நாவல் பழங்களை அளவுக்கு அதிகமாக எடுக்க வேண்டாம். இல்லாவிட்டால், அவை உடல் வலி மற்றும் காய்ச்சலுக்கு வழிவகுக்கும்.

Related Posts

Leave a Comment

Translate »