கபம் என்றால் சளி என்பதும், சுரம் என்றால் காய்ச்சல் என்பதும் பொருள். இந்த குடிநீர் சுரத்தயும், சளியையும் தடுத்து நிறுத்துவதால் கபசுர குடிநீர் என்று பெயர் வந்தது. கபசுர குடிநீர் அதிக சக்தி தன்மை உடையது. இது 15 மூலிகை பொருட்களால் ஆனது. இந்த நீரை குடிப்பதால் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடும்.
கபசுர குடிநீர் தயாரிக்கப்பட்ட மூலிகை பொருளானது சுக்கு, திப்பிலி, ஆடாதோடை, கற்பூரவள்ளி, சீந்தில், கிராம்பு, நிலவேம்பு, கடுக்காய் பொடி, அக்கிரகாரம், கோஷ்டம், கோரைக்கிழங்கு, வட்ட திருப்பி, சிறுகாஞ்சுரிவேர், நீர்முள்ளிவேர் போன்ற 15 மூலிகை பொருட்களால் செய்யப்பட்டது தான் இந்த கபசுர குடிநீர். இந்த மூலிகை பொருளால் ஆன கபசுர குடிநீர் பவுடரை நாட்டு மருத்துவ கடைகளில் வாங்கி நாம் பருகி வரலாம். சரி வாங்க நண்பர்களே இப்போது முழுமையாக கபசுர குடிநீரின் நன்மைகளை பற்றி படித்து தெரிந்துகொள்ளுவோம்..!
காய்ச்சல் / சளி நீங்க:

அதிகமாக சளி, காய்ச்சல் இருக்கும் நேரத்தில் 15 வித மூலிகை பொருளால் ஆன கபசுர பொடியை 4 தேக்கரண்டி அளவிற்கு எடுத்து 1 லிட்டர் நீரில் சேர்த்து பாதி அளவிற்கு வரும்வரை நன்றாக கொதிக்க வைத்து ஆரிய பின் 1 வாரம் அல்லது 10 நாட்கள் வரையிலும் காலை, மாலை என இருவேளையிலும் வெறும் வயிற்றில் குடித்துவரலாம்.
பெரியவர்கள் இந்த கபசுர குடிநீரை 30 ml அளவும், சிறியவர்கள் 15 ml அளவு குடித்து வரலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து சளி, காய்ச்சல் உடனடியாக குறைந்துவிடும்.
தொண்டை மற்றும் நுரையீரலில் உள்ள சளியை அகற்றும் கபசுர குடிநீர்:

கபசுர குடிநீரில் உள்ள மூலிகை பொருட்கள் தொண்டை பகுதியில் மற்றும் நுரையீரலில் இருக்கும் சளிகளை அகற்றும் தன்மை வாய்ந்தது இந்த கபசுர குடிநீர். உடலில் உள்ள கிருமி தொற்றுக்களை கட்டுப்பாட்டுடன் வைத்து இரத்த வெள்ளையணுக்களின் அளவை அதிகரிக்கும்.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் கபசுர குடிநீர்:

கபசுர நீர் குடிப்பதால் உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைத்து கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கும். உடலில் உஷ்ணத்தை அதிகப்படுத்தி கபத்தினை குறைத்து காய்ச்சலை தனித்துவிடும் கபசுர குடிநீர்.
செரிமான கோளாறுகளை சரி செய்யும் கபசுர குடிநீர்:

சுவாச பகுதிகளில் உள்ள இருக்கங்களை குறைக்கும். உடலில் உள்ள உமிழ்நீர் சுரப்பை அதிகரித்து செரிமான சக்திகளை மேம்படுத்தும் ஆற்றல் மிக்கது இந்த கபசுர குடிநீர். பசியின்மை உள்ளவர்களுக்கு நன்கு பசியை தூண்டச் செய்கிறது கபசுர குடிநீர்.
குறிப்பு:

சாதாரண நாட்களில் எந்த வித உடல் பாதிப்பும் இல்லாதவர்கள் வாரம் 1 முறை நோய் தடுப்பு மருந்தாக இந்த கபசுர கஷாயத்தை குடிக்காலம். வாரம் 1 முறை இல்லையென்றால் மாதத்திற்கு 2 முறை இதனை அருந்த வேண்டும்.
முக்கியமாக கபசுர குடிநீர் பொடியை தினமும் பயன்படுத்தி வருவதை தவிர்த்துக்கொள்வது நல்லது. தினமும் எடுத்துக்கொண்டால் உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்து உடலில் பல பிரச்சனைகள் ஏற்ப்படக்கூடும்.
இந்த பொடிகளில் உள்ள மூலிகைகள் கிடைக்காத பட்சத்தில் எளிமையாக கிடைக்கும் மூலிகை பொருளை வைத்து கஷாயம் தயார் செய்து அருந்தி வரும் நிலையில் மூலிகைக்கு ஏற்றவாறே நம் உடலுக்கு பலம் கிடைக்கும்.