தேவையான பொருட்கள் :
தர்பூசணி – 2 கப்
சர்க்கரை – தேவையான அளவு
ஃபிரெஷ் கிரீம் – 2 ஸ்பூன்
ரோஸ் எசன்ஸ் – ஒரு துளி
செய்முறை
தர்பூசணியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள்.
பின் அதில் ஃபிரெஷ் கிரீம் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
அடுத்து அதில் ரோஸ் எசன்ஸ் சேர்த்துக்கொள்ளுங்கள்.
சர்க்கரை தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளுங்கள்.
மைய அரைத்து அதை அப்படியே ஒரு கின்னத்தில் ஊற்றி ஃபிரீசரில் வையுங்கள்.
2 மணி நேரம் கழித்துப் பார்த்தால் கெட்டியான பதத்தில் தர்பூசணி ஐஸ்கிரீம் தயார்.