உடற்பயிற்சி செய்வது மனதிற்கும், உடலுக்கும் சிறந்தது

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

இதயத்திற்கும், தசைகளுக்கும் வழக்கமான அடிப்படையில் மக்கள் உடற்பயிற்சி வழங்கி வந்தால், சிந்திப்பதும், ஞாபக திறன்களும் அதிகமாக மேம்படுகிறது என்று 39 ஆய்வுகளில் செய்யப்பட்ட மீளாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எந்தவொரு வயதிலும் உடற்பயிற்சி செய்வது மனதிற்கும், உடலுக்கும் சிறந்தது என்கிறர்கள் ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள்.

வாரத்தில் பலமுறை மிதமான உடற்பயிற்சி மேற்கொள்வது 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, மனகை கூர்மையாக வைத்திருக்க சிறந்த வழி என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இதயத்திற்கும், தசைகளுக்கும் வழக்கமான அடிப்படையில் மக்கள் உடற்பயிற்சி வழங்கி வந்தால், சிந்திப்பதும், ஞாபக திறன்களும் அதிகமாக மேம்படுகிறது என்று 39 ஆய்வுகளில் செய்யப்பட்ட மீளாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

எந்தவொரு வயதிலும் உடற்பயிற்சி செய்வது மனதிற்கும், உடலுக்கும் சிறந்தது என்கிறர்கள் ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள். மிகவும் சவால் நிறைந்த உடற்பயிற்சிகளை செய்ய முடியாத 50 வயதிற்கு மேலானோருக்கு, தாய் ச்சி போன்ற உடற்பயிற்சிகள் பரிந்துரைக்கப்படுகின்றன என்று பிரிட்டிஷ் ஜெனல் ஆப் ஸ்போட்ஸ் மெடிசின் என்கிற இதழில் வெளியான இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

உடற்பயிற்சியின் மூலம் அதிக ரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை மூளை பெறுகிறது. அதனால், மூளை நலமாக இருக்க உத்வேகம் அல்லது தூண்டுதல் கிடைப்பதோடு, புதிய நாளங்கள் மற்றும் தொடர்புகளை ஏற்படுத்த உதவுகின்ற ஹார்மோன்களின் வளர்ச்சிக்கும் உத்வேகம் கிடைக்கிறது.

பல்வேறு வைகையான மூளை சோதனைகளில், சிந்தித்தல், கற்றுக்கொள்ளுதல் மற்றும் பகுத்தறிதல் போன்ற அறிவாற்றல் திறன்களை ஏரோபிக் உடற்பயிற்சி மேம்படுத்துவதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். ஞாபகம் வைத்துக் கொள்வதிலும், நிர்வாக செயல்பாடு என்று கூறப்படும் திட்டமிடும் மற்றும் ஒருங்கிணைப்பு செய்கின்ற மூளையின் திறனிலும் உடற்பயிற்சி, உதாரணமாக, எடைகளை பயன்படுத்துவது, குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.

மூளையின் நலத்தை மேம்படுத்துவதற்கு, இந்த இரண்டு வகை உடற்பயிற்சிகளையும் 50 வயதுக்கு மேலானோருக்கு பரிந்துரை செய்வதற்கு போதுமானதாக இந்த கண்டுபிடிப்புக்கள் உள்ளன. “வாரத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை நீங்கள் மிதமான உடற்பயிற்சி செய்து வந்தாலும் கூட, அறிவாற்றல் செயல்பாட்டில் மேம்பாடுகள் தோன்றுகின்றன. ஆனால், அதிக உடற்பயிற்சி செய்து வந்தால் இந்த மேம்பாடுகள் அதிகமாக காணப்பட்டன” என்று அவர் கூறியுள்ளார்.

மிதமான உடற்பயிற்சி செய்கின்றபோது, மக்கள் உரையாடல் செய்கின்ற அளவுக்கு மிதமான அசைவுகளாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வயதுவந்தோர் ஒவ்வொரு வாரமும் குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான ஏரோபிக் செயல்பாட்டையும், முக்கிய தசைகளுக்கான உடற்பயிற்சியை வாரத்திற்கு இரண்டு அல்லது அதைவிட அதிக நாட்கள் செய்ய தேசிய சுகாதார சேவை பரிந்துரைக்கிறது.

“ஏரோபிக் மற்றும் வலிமைப்படுத்தும் உடற்பயிற்சிகளை செய்வது பலவகை சுகாதார நலன்களை பெற்றிட செய்கிறது” மிதிவண்டி சவாரி அல்லது வேலைக்கு நடந்து செல்வது ஏரோபிக் செயல்பாடு போல அமையும். கனமான பொருட்கள் வாங்கும் பைகளை சுமந்து செல்வது வலிமையான உடற்பயிற்சி செய்வதற்கான எடுத்துக்காட்டுக்களில் ஒன்றாகும்.

“வாரத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை நீங்கள் மிதமான உடற்பயிற்சி செய்து வந்தாலும் கூட, அறிவாற்றல் செயல்பாட்டில் மேம்பாடுகள் தோன்றுகின்றன. ஆனால், அதிக உடற்பயிற்சி செய்து வந்தால் இந்த மேம்பாடுகள் அதிகமாக காணப்பட்டன” என்று அவர் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment

Translate »