குளிக்கும் போது இந்த இடங்களில் அலட்சியம் காட்டாதீங்க….

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

குளியல் என்பது உடலை நனைத்து சோப்பு நுரைகள்  வந்துவிட்டால் முழுமைப் பெறாது. இந்த பாகங்களையும் கவனித்து சுத்தம் செய்தால்தான் நம் உடல் சுகாதாரமாக இருக்கிறது என்று அர்த்தம். அப்படி நீங்கள் அலட்சியம் காட்டும் இந்த பாகங்கள் மீது இனியாவது அக்கறை காட்டுங்கள்.

தலைமுடி வேர்கள் : தலைக்குக் குளிக்கும்போது பெரும்பாலானோர் தலை முடியை மட்டும் அலசிவிட்டு வேர்களை மேலோட்டமாக தேய்த்துவிட்டு குளித்துவிடுவார்கள். ஆனால் உண்மையில் இறந்த செல்கள், அழுக்கு , பொடுகு இவை எல்லாம் போக வேண்டுமெனில் நீங்கள் வேர்களில்தான் அக்கறை செலுத்த வேண்டும்.

முதுகு : முதுகு தேய்க்க கைகள் எட்டாது என்றாலும் இதற்கென பிரெஷ் விற்கிறது அல்லது வீட்டில் இருப்போரின் உதவியை நாடலாம். இல்லையெனில் முதுகில் அழுக்குகள் சேர்ந்து தோல் அலர்ஜி, தோல் நோய் வரலாம்.

நகங்களுக்கு உட்பகுதி : கைகளைக் கழுவும் போது உள்ளங்கைகள், விரல்களை மட்டும் தேய்த்துவிட்டு நகங்களின் உட்பகுதியை மறந்துவிடுவார்கள். ஆனால் அங்குதான் அழுக்கு, கிருமிகள் தேங்கியிருக்கும். எனவே அடுத்த முறை மறந்துவிடாதீர்கள்.

காது உட்பகுதி மற்றும் பின் பகுதி : காதை கழுவும் போது அதன் பின் பகுதியையும் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். அதேபோல் குளித்து முடித்துவிட்டு காதுக்குள் இருக்கும் நீரை துடைத்து சுத்தம் செய்யுங்கள்.

Related Posts

Leave a Comment

Translate »