தினமும் 2 கப்புக்கு அதிகமாக காபி குடிக்கும் பெண்ணா? அப்ப இந்த இனிய செய்தி உங்களுக்கு தான்

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

ஒருநாளைக்கு பால் கலப்படமில்லாத 2 – 3 கப் காஃபி குடிக்கும் பெண்களுக்கு உடல் எடை மற்றும் தொப்பை தானாகக் குறையும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நற்செய்தி காஃபி பிரியர்களை மனமகிழ்ச்சி அடைய வைத்துள்ளது என்றே சொல்லலாம்.

பெண்கள் தினசரி பால் கலப்படமில்லாத 2 – 3 கப் காஃபி குடிக்கிறார்கள் எனில் அவர்களின் உடலின் ஒட்டுமொத்த எடையிலிருந்து சராசரியாக 2.8% எடை குறைவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நியூட்ரீஷியன் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில் ஆரோக்கியமான பெண்களைக் காட்டிலும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்படவர்களாக இருந்தாலும், புகைப்பிடிப்பவர்கள், பிடிக்காதவர்களாக இருந்தாலும் இந்த உடல் எடையில் மாற்றம் இருந்துள்ளது.

அதேபோல் 20 – 44 வயதுக்கு உட்பட்ட ஆண்களுடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த உடல் எடையிலிருந்து 1.3% எடை மட்டுமே குறைகிறது. இதற்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்தபோது காஃபியில் கஃபைன் இருப்பதைக் காட்டிலும் அதில் உடல் எடையைக் குறைக்கக் கூடிய ஆண்டி ஒபேசிட்டி கலவை இருப்பதைக் கண்டதாக ஐரோப்பாவின் ஏஞ்சலியா ரக்‌ஷின் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு கூறியுள்ளது.

அதன்படி 20 – 44 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு ஒரு நாளைக்கு பால் கலப்படமில்லாத 2 அல்லது 3 கப் காஃபி குடிக்கும் பழக்கம் இருந்தால் 3.4 % உடல் எடையைக் குறைக்கலாம் என்றும், 45 – 69 வயது கொண்ட பெண்கள் 4 கப்பிற்கு மேல் குடித்தால் 4.1 சதவீதம் உடல் எடைக் குறைவதாகவும் கூறப்பட்டுள்ளது.

எனவே காஃபி புத்துணர்ச்சி அளிக்கும், டென்ஷனிலிருந்து மீட்டு ரிலாக்ஸ் அளிக்கும் என்பதைக் காட்டிலும் உடல் எடையைக் குறைக்கிறது என்பது நல்ல விஷயம்தான்.

Related Posts

Leave a Comment

Translate »