வறண்ட உதட்டை குணப்படுத்தும் ஆலிவ் ஆயில்:
சிலருக்கு எப்போதும் உதடு வறண்ட நிலையிலே இருக்கும். இதற்கு பவுலில் 1/2 ஸ்பூன் சுகர் ஸ்க்ரப் அதனுடன் 2 அல்லது 3 ட்ராப்ஸ் ஆலிவ் ஆயிலை மிக்ஸ் செய்து வறண்ட இடத்தில் தடவி வர வேண்டும். இந்த டிப்ஸை தொடர்ச்சியாக செய்யாமல் ஒரு நாள் விட்டு கூட செய்து வரலாம். வறண்ட பகுதி நல்ல மாற்றம் கிடைக்கும்.
தோல் பளபளக்க ஆலிவ் ஆயில்:
தோல் பகுதிகள் வெள்ளையாக மாற பவுலில் கஸ்தூரி மஞ்சள் தூள் 2 அல்லது 3 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். இதனுடன் ஆலிவ் ஆயில் 3 அல்லது 4 ட்ராப்ஸ்கள் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும். நன்றாக கலந்ததை தோல் பகுதியில் இரவு நேரத்தில் தடவி வரவேண்டும். இரவு முழுவதும் வைத்திருந்தால் தோலிற்கு நல்ல மாற்றம் தெரியும். தடவியதை காலையில் வாஷ் செய்து கொள்ளலாம்.
வரி தழும்புகள் மறைய ஆலிவ் ஆயில்:
சிலருக்கு உடலில் வரி தழும்புகள்(stretch marks) இருக்கும். இது போன்ற வரி தழும்பு மறைய பயோ ஆயில்(Bio Oil) மற்றும் ஆலிவ் ஆயிலை மிக்ஸ் செய்து தடவி வந்தால் கண்டிப்பாக அந்த தழும்பு கோடுகள் மறைந்துவிடும்.
பாத வெடிப்பு நீங்க ஆலிவ் ஆயில்:
அனைவருக்கும் பாதங்களில் வெடிப்பு வருவது இயல்பு. பாத வெடிப்பு நீங்க வாஸ்லின் மற்றும் 2,3 ட்ராப்ஸ் ஆலிவ் ஆயிலை சேர்த்து வெடிப்பு பகுதியில் மசாஜ் செய்து சாக்ஸ் அணிந்தால் விரைவில் வெடிப்பு நீங்கும்.
முகம் வெள்ளையாக ஆலிவ் ஆயில்:
பெண்கள் அனைவருக்கும் ஃபேஸ் பேக் போடும் வழக்கம் இருக்கும். இதற்கு கடைகளில் விற்கும் முல்தானிமிட்டி உபயோகிப்பார்கள். முல்தானிமிட்டி சருமத்தை வறண்ட நிலையில் ஏற்படுத்திவிடும். அதனால் முல்தானிமிட்டியுடன் 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில், ரோஸ் வாட்டர் மிக்ஸ் செய்து முகத்தில் தடவி வர முகம் விரைவில் பளிச்சென்று இருக்கும். இந்த டிப்ஸ் சரும பிரச்சனை உள்ள அனைவரும் பயன்படுத்தலாம்.