பலரும் குளிப்பதில் அக்கறை செலுத்துவோர் அந்நேரத்தில் தொப்புளையும் சுத்தம் செய்ய வேண்டும் என்பதை மறந்துவிடுகிறார்கள். ஒரு சிலர்தான் அதற்கென நேரம் ஒதுக்கி அதை சுத்தம் செய்கிறார்கள். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா..? தொப்புளில் 67 வகையான பாக்டீரியாக்கள் தேங்குமாம். எனவே இனிமேலாவது தொப்புளுக்கும் அக்கறை செலுத்துங்கள். எப்படி பராமரிப்பது என்று பார்க்கலாம்.
தொப்புளில் நேரடியாக விரல்களை வைத்து சுத்தம் செய்ய முடியாது. இயர் பட்ஸ் கொண்டு சுத்தம் செய்யலாம். இயர் பட்ஸை தேங்காய் எண்ணெயில் தொட்டு பின் தொப்புளுக்குள் விட்டு தேய்த்து எடுத்தால் அழுக்கு வந்துவிடும்.
தேய்க்கும்போது வேகமாகவும், முறையற்றும் செய்யாமல் பொறுமையாக மென்மையாக தேய்த்து எடுங்கள். அதன் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் என ஏதாவதொன்றை ஒரு துளி தொப்புளில் விட்டு தேய்த்து மசாஜ் செய்யுங்கள். இதனால் வயிற்றுக் கோளாறுகளும் குணமாகும்.
தூக்கம் வரவில்லை என்றாலும் படுக்கும் முன் தொப்புளில் லாவண்டர் எண்ணெய், சந்தன எண்ணெய் என ஏதாவதொரு வாசனை எண்ணெயை ஒரு துளி ஊற்றி மசாஜ் செய்தால் நன்கு தூக்கம் வரும்.
எக்காரணம் கொண்டும் பூ குத்தும் பின், சேப்டி பின்னால் தொப்புளை சுத்தம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் அது ஆபத்தில் முடியலாம். மேலும் தொப்புளில் தண்ணீர் அல்லது சீல் வந்தால் கை வைத்தியம் பார்க்காமல் உடனே மருத்துவரை பார்ப்பது நல்லது.