வேப்பிலை சோப் தயாரிக்க – தேவையான பொருள்:
- வேப்பிலை பவுடர் – 1 டீஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – 40 ml
- வேப்பெண்ணை – 10 ml
- காஸ்டிக் லை – 10 ml
- சோப் மோட் – தேவைப்படும் வடிவில்
செய்முறை விளக்கம் 1:
முதலில் 40 மில்லி அளவில் எடுத்துவைத்துள்ள தேங்காய் எண்ணெயில் 10 மில்லி அளவு வேப்ப எண்ணெயை கலந்து கொள்ளவும். அடுத்து இதனுடன் வேப்பிலை பவுடரை சேர்க்க வேண்டும்.
செய்முறை விளக்கம் 2:
காஸ்டிக் லே தயார் செய்வதற்கு 5 ml காஸ்டிக் சோடா எடுத்துக்கொள்ளவும். அதன்பிறகு 10 ml தண்ணீர் சேர்த்து 4 மணிநேரம் வைக்கவேண்டும். இப்போது இதனை கட்டிகள் இல்லாதவாறு நன்றாக மிக்ஸ் செய்யவேண்டும். அடுத்து நன்றாக கலந்ததை ரெடி செய்த காஸ்டிக் லேயில் ஊற்றிக்கொள்ளவும்.
செய்முறை விளக்கம் 3:
காஸ்டிக் லேயில் ஊற்றிய பிறகு கெட்டியான நிலைக்கு வரும்வரை நன்றாக இதனை கலந்துகொள்ளவும். அடுத்து கலந்த கலவையை சோப் மோல்டில் ஊற்றவும்.
செய்முறை விளக்கம் 4:
சோப் மோல்டில் ஊற்றிய பிறகு வேப்பிலை சோப் ரெடி ஆகுவதற்கு 12 மணிநேரம் ஆகும். 12 மணி நேரம் கழித்த பின்னர் இந்த சோப்பை நாம் வெளியில் எடுத்துவிடாலம். இதனை செய்த நாளிலிருந்து 30 நாட்கள் பின்னரே உபயோகப்படுத்த வேண்டும்.
குறிப்பு:
இந்த வேப்பிலை சோப்பை 3 வருடம் வரை தாராளமாய் வைத்து பயன்படுத்தலாம்.