மொறு மொறு ஸ்நாக்ஸ் செய்வது எப்படி – தேவையான பொருட்கள்:
- புடலங்காய் – (வட்டமாக நறுக்கியது)
- கான் ஃப்ளவர் மாவு – 2 டீஸ்பூன்
- அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
- கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- இஞ்சி / பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
- ஆயில் – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
சுவையான மொறு மொறு ஸ்நாக்ஸ் செய்முறை விளக்கம் 1:
Snake Gourd Recipes: முதலில் புடலங்காயை வட்டமாக நறுக்கி உள்ளே உள்ள விதைகளை நீக்கிவிட்டு ஒரு பவுலில் எடுத்துக்கொள்ளவும்.
பிறகு பவுலில் வைத்திருக்கும் புடலங்காயுடன் கான் ஃப்ளவர் மாவு 2 டீஸ்பூன் சேர்த்து கொள்ளவும்.
Evening Snacks Recipes – செய்முறை விளக்கம் 2:
Snake Gourd Recipes In Tamil: அடுத்து அரிசி மாவு 2 டேபிள் ஸ்பூன் சேர்க்கவும். அரிசி மாவு சேர்த்த பிறகு கடலை மாவு 2 டேபிள் ஸ்பூன் சேர்த்துக்கொள்ளவும்.
அடுத்து மிளகாய் தூள் 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன் அளவிற்கு சேர்க்கவும்.
இதனுடன் தேவையான அளவிற்கு அல்லது 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து கொள்ளவும்.
மாலை நேர ஸ்நாக்ஸ் செய்முறை விளக்கம் 3:
Evening Snacks: இப்போது எல்லாவற்றையும் கைகளால் நன்றாக கலந்து கொள்ளவும்.
நன்றாக கலந்த பிறகு ஆயில் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து கொள்ளவும். இதனுடன் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக்கூட கலந்து கொள்ளலாம்.
மொறு மொறு சிப்ஸ் செய்முறை விளக்கம் 4:
Evening Snacks Recipes: அடுத்து கடாயில் பொரித்து எடுக்க தேவையான அளவிற்கு எண்ணெயை ஹீட் செய்து கொள்ளவும்.
5 நிமிடம் இது நன்றாக ஊறிய பிறகு அதிக ஃப்ளேமில் அடுப்பை வைத்து ஒவ்வொன்றாக பொரித்து எடுக்கவும்.
எண்ணெயில் எல்லாத்தையும் சேர்த்து போடாமல் தனித்தனியாக போட்டு எடுக்க வேண்டும்.
Tea Time Snacks – செய்முறை விளக்கம் 5:
Evening Snacks Recipes in tamil: லேசாக வெந்த நிலையில் வரும்போது சிப்ஸை இருபுறமும் பிரட்டி எடுக்க வேண்டும்.
நன்றாக மொறுமொறுப்பு தன்மை வந்த பிறகு தனியாக ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
இதனை எண்ணெயில் உடனே கூட பொரித்து எடுக்கலாம் அல்லது 5 நிமிடம் வைத்த பிறகும் பொரிக்கலாம்.
அவ்ளோதாங்க இந்த மொறு மொறு புடலங்காய் சிப்ஸ் ரெடி.
பெரும்பாலும் அனைவரும் புடலங்காயில் கூட்டு, பொரியல் இது போன்றுதான் செய்வார்கள். இன்று நாம் பார்த்த ரெசிபி அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். கண்டிப்பா எல்லாரும் இதை ட்ரை பண்ணி பாருங்க..!