தேவையான பொருட்கள் :
அரிசி மாவு – கால் கிலோ
முளைகட்டிய பச்சை பயறு – 2 டேபிள்ஸ்பூன்
கேரட் – 3
பீன்ஸ் – 100 கிராம்
தேங்காய் துருவல் – கால் கப்
உப்பு -தேவையான அளவு
செய்முறை:
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசி மாவுடன் பீன்ஸ், கேரட், உப்பு சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து புட்டுமாவு பதத்துக்கு தயார் செய்து கொள்ளவும்.
பின்னர் மாவு கலவையை இட்லி தட்டில் போட்டு வேகவைத்துக்கொள்ளவும்.
ஆறியதும் தேங்காய் துருவல், முளைகட்டிய பச்சை பயறு கலந்து சாப்பிடலாம்.
சூப்பரான புட்டு ரெடி.