சுவையான ஆலு டகோஸ் செய்வது எப்படி? – Aloo Tacos Recipe…!

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

ஆலு டகோஸ் செய்ய – தேவையான பொருட்கள்:

  1. மைதா மாவு – 1 கப் 
  2. பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன் 
  3. உப்பு – தேவையான அளவு 
  4. எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் 
  5. தண்ணீர் – 1/4 கப் 
  6. வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு – 3
  7. பெரிய வெங்காயம் – (நீட்ட வடிவில் நறுக்கியது 1)
  8. சில்லி ஃப்ளேக் – 1 டீஸ்பூன் 
  9. மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் 
  10. கொத்தமல்லி – சிறிதளவு 
  11. ரெட் சில்லி சாஸ் – 1 ஸ்பூன் அளவு 
  12. துருவிய சீஸ் – சிறிதளவு 

சுவையான ஆலு டகோஸ் செய்வது எப்படி செய்முறை விளக்கம் 1:

முதலில் ஒரு பவுலில் மைதா மாவு 1 கப் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். மைதா மாவுடன் பேக்கிங் பவுடரை 1 டீஸ்பூன் அளவிற்கு சேர்த்துக்கொள்ள வேண்டும். அடுத்து தேவையான அளவிற்கு உப்பு, 3 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய், 1/4 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும் அளவிற்கு 5 – 10 நிமிடம் பிசைந்து கொள்ளவேண்டும்.

உருளையை வைத்து ஆலு டகோஸ் எப்படி செய்வது செய்முறை விளக்கம் 2:

அடுத்து பிசைந்த மாவில் எண்ணெய் சிறிதளவு தடவி மூடி 15 நிமிடம் தனியாக வைத்திருக்க வேண்டும். அடுத்ததாக 3 வேகவைத்த உருளைக்கிழங்கு எடுத்து நன்றாக மசித்துக்கொள்ளவும். நன்றாக மசித்த பின்னர் இதை தனியாக வைக்கவும்.

உருளைக்கிழங்கு ரெசிபி செய்வது எப்படி செய்முறை விளக்கம் 3:

இப்போது கடாயை ஹீட் செய்துகொள்ளவும். ஹீட் செய்த கடாயில் 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றவும். கடாயில் இருக்கும் எண்ணெய் நன்றாக ஹீட் ஆன பிறகு நீட்ட வடிவில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி விடவேண்டும். வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு சில்லி ஃப்ளேக் 1 டீஸ்பூன் சேர்த்து வதக்கவும்.

ஆலு டகோஸ் ரெசிபி செய்ய செய்முறை விளக்கம் 4:

சில்லி ஃப்ளேக் நன்றாக வதங்கிய பிறகு மிளகாய் தூள் 1 டீஸ்பூன் சேர்த்து வதக்கி கொள்ளவும். வதங்கிய பிறகு அடுப்பை நிறுத்தி கொள்ளலாம். இப்போது வதக்கி வைத்த வெங்காயத்தை ஆற வைக்க வேண்டும். ஆறவைத்த பிறகு மசித்து வைத்த உருளைக்கிழங்கில் வதக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

உருளைக்கிழங்கு ஆலு டகோஸ் எப்படி செய்வது செய்முறை விளக்கம் 5:

வதக்கிய வெங்காயம் மற்றும் மசித்த உருளைக்கிழங்கை பிசைந்த பிறகு சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து இதையும் பிசைந்து வைத்து கொள்ளவும். இப்போது முதலில் பிசைந்து வைத்த மைதா மாவினை உருண்டையாக உருட்டி சப்பாத்தி போல் தேய்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து தேய்த்த மாவை சூடான பேனில் மிதமான அளவிற்கு போட்டு எடுக்கவும்.

உருளைக்கிழங்கு டகோஸ் ரெசிபி செய்வதற்கு செய்முறை விளக்கம் 6:

அடுத்து தேய்த்த மாவில் சில்லி சாஸ் இதில் தடவ வேண்டும். சாஸ் தடவிய பிறகு துருவிய சீஸை அரை பக்க அளவிற்கு தூவ வேண்டும். சீஸை தூவிய பிறகு கொத்தமல்லியுடன் மசித்து வைத்த உருளைக்கிழங்கை பாதி அளவிற்கு எடுத்து இதில் ஒரு பக்கமாக வைத்து இதன் மேல் சிறிதளவு சீஸ் தூவி மறு பக்கத்தை மடக்கி விடவேண்டும்.

உருளையை வைத்து ஆலு டகோஸ் எப்படி செய்வது செய்முறை விளக்கம் 7:

இப்போது கடாயில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் எடுத்து ஹீட் செய்யவும். எண்ணெய் நன்றாக ஹீட் ஆனப்பிறகு செய்த டக்கோஸை இரண்டு பக்கமும் மிதமான சூட்டில் வைத்து 3 நிமிடம் பொறித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்ளோதாங்க இந்த சூப்பரான உருளைக்கிழங்கு டகோஸ் ரெடி. கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க..!

Related Posts

Leave a Comment

Translate »