ஸ்னாக்ஸ் ரெசிபி செய்ய – தேவைப்படும் பொருள்:
- இட்லி – 2
- வேகவைத்த உருளைக்கிழங்கு – 1(துருவியது)
- பெரிய வெங்காயம் – 1(பொடியாக நறுக்கியது)
- ஜீரகம் – சிறிதளவு
- அரிசி மாவு – 3 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
- கொத்தமல்லி – சிறிதளவு
- பிரட் – 2(மிக்ஸி ஜாரில் அரைத்தது)
- எண்ணெய் – தேவையான அளவு
இட்லி, உருளைக்கிழங்கு வைத்து சுவையான ரெசிபி செய்முறை:
ஸ்டேப் 1:
முதலில் ஒரு பவுலில் வேகவைத்த ஒரு உருளைக்கிழங்கை எடுத்து துருவி எடுத்துக்கொள்ளவும். அதே பவுலில் 2 இட்லியை நன்றாக உதிர்த்துவிட்டு கொள்ளவும். இட்லியை உதிர்த்து விடும் முன் தண்ணீரில் 1 நிமிடம் இட்லியை ஊறவைத்து கொண்டால் இட்லியானது நன்கு உதிரியாக கிடைக்கும்.
ஸ்டேப் 2:
உதிர்த்து விட்ட இட்லியை சேர்த்த பிறகு நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்துக்கொள்ளவும். வெங்காயம் சேர்த்த பிறகு சிறிதளவு சீரகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஸ்டேப் 3:
சீரகம் சேர்த்த பிறகு 3 ஸ்பூன் அரிசி மாவினை சேர்த்துக்கொள்ளவும். அடுத்து சேர்க்க வேண்டியது உப்பு தேவையான அளவிற்கு சேர்த்துக்கொள்ளவும்.
ஸ்டேப் 4:
அடுத்து மிளகாய் தூள் 1/2 ஸ்பூன் சேர்க்கவும். உங்களுக்கு காரம் எந்த அளவிற்கு வேண்டுமோ அந்த அளவில் சேர்த்துக்கொள்ளலாம். மிளகாய் தூள் சேர்த்த பிறகு கொத்தமல்லி சிறிதளவு சேர்த்துக்கொள்ளவும்.
ஸ்டேப் 5:
இப்போது எல்லாவற்றையும் சேர்த்த பிறகு பவுலில் உள்ளதை தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பிசைந்து எடுத்துக்கொள்ளவும். கையில் மாவு ஒட்டாமல் இருப்பதற்கு சிறிதளவு எண்ணெயை கையில் தேய்த்து கொள்ளவும்.
ஸ்டேப் 6:
இப்போது மாவினை உருண்டை வடிவில் உருட்டி நன்றாக தட்டை வடிவில் தட்டிய பிறகு உருண்டையின் நடு பகுதியில் சிறியதாக ஓட்டை போட்டுக்கொள்ளவும். மிக்ஸி ஜாரில் 2 பிரெட் துண்டுகளை அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
ஸ்டேப் 6:
அரைத்து வைத்த பிரெட் துண்டுகளில் ரெடி செய்த உருண்டைகளை இந்த பிரெட் துகள்களில் பிரட்டி எடுத்துக்கொள்ளவும். அடுத்து கடாயில் பொரித்து எடுப்பதற்கு தேவையான எண்ணெயை ஹீட் செய்யவும்.
ஸ்டேப் 7:
எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு பிரெட் துகள்களில் பிரட்டியதை இந்த எண்ணையில் போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து எடுக்கவும். இந்த வடையை இரண்டு புறமும் நன்றாக திருப்பிவிட்டு எடுக்கவும்.
அவ்ளோதாங்க இந்த சுவையான இட்லி, உருளைக்கிழங்கு வைத்து செய்த வடை ரெசிபி தயார். வீட்டில் மீந்துபோகும் இட்லியை இனி தூக்கிபோடாமல் இந்த ரெசிபியை எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா எல்லாருக்கும் பிடிக்கும். நன்றி வணக்கம்..!