தேவையான பொருடகள் :
வாழைக்காய் – 3
பெ.வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
தேங்காய் துருவல் – கால் கப்
இஞ்சி – 1 துண்டு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
கடுகு, உளுந்தம்பருப்பு – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவைக்கு
செய்முறை:
பெரிய வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாழைக்காயை இரண்டாக கீறி அகன்ற பாத்திரத்தில் போட்டு அவை மூழ்கும்வரை தண்ணீர் ஊற்றி குழையவிடாமல் வேகவைத்து எடுக்கவும்.
ஆறியதும் தோலை நீக்கி பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், மிளகாய், இஞ்சி, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறத்துக்கு வந்ததும் உதிர்த்து வைத்த வாழைக்காய், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து இடைவிடாமல் கிளறி வாழைக்காய் வெந்ததும் இறக்கி பரிமாறலாம்.
சூப்பரான வாழைக்காய் புட்டு ரெடி.