ஒரே நிமிடத்தில் சுவையான பீட்சா ரெசிபி..! Pizza Recipe In Tamil..!

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

பீட்சா செய்ய – தேவையான பொருட்கள்:

  1. மைதா மாவு – 4 டேபிள் ஸ்பூன் 
  2. பேக்கிங் பவுடர் – 1/4 டீஸ்பூன் 
  3. பேக்கிங் சோடா – சிறிதளவு 
  4. உப்பு – 1/4 டீஸ்பூன் 
  5. காய்ச்சிய பால் – 3 டேபிள் ஸ்பூன் 
  6. ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன் 
  7. பீட்சா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன் 
  8. ஆலீவ்ஸ் ரெட் சில்லி – தேவையான அளவு 
  9. துருவிய சீஸ் – சிறிதளவு 
  10. ஆரிகேனோ பவுடர் – சிறிதளவு 

பீட்சா செய்வது எப்படி செய்முறை விளக்கம் 1:

முதலில் மைக்ரோவேவ் அவனில் வைக்கக்கூடிய பீங்கான் கப்பில் 4 டேபிள் ஸ்பூன் அளவிற்கு மைதா மாவு எடுத்துக்கொள்ளவும். மைதா மாவு சேர்த்த பிறகு பேக்கிங் பவுடர் 1/4 டீஸ்பூன் அளவு சேர்க்கவும்.

பீட்சா எப்படி செய்வது செய்முறை விளக்கம் 2:

1` பேக்கிங் சோடா சேர்த்த பிறகு உப்பு 1/4 டீஸ்பூன் அளவிற்கு சேர்த்துக்கொள்ளவும்.

பீட்சா எப்படி செய்றது செய்முறை விளக்கம் 3:

இப்போது எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். அடுத்து மிக்ஸ் செய்த பிறகு காய்ச்சி ஆறவைத்த பாலை 3 டேபிள் ஸ்பூன் அளவிற்கு சேர்த்து மிக்ஸ் செய்துக்கொள்ளவும். இதனுடன் ஆலிவ் ஆயில் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.

சுவையான பீட்சா செய்ய செய்முறை விளக்கம் 4:

மாவினை நன்றாக மிக்ஸ் செய்த பிறகு அதன் மேல் பீட்சா சாஸை 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்து மாவின்மேல் தடவிக்கொள்ள வேண்டும். அடுத்ததாக இதை அலங்கரிக்க ஆலீவ்ஸ் ரெட் சில்லி அப்படி இல்லையென்றால் வீட்டில் இருக்கக்கூடிய காய்கறிகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

பீட்சா செய்ய செய்முறை விளக்கம் 5:

அடுத்து பீட்சாவில் மொசரெல்லா சீஸ் அல்லது சாதாரண சீஸை துருவி கப்பில் சுற்றிலும் சேர்த்துக்கொள்ளவும். சீஸை சேர்த்தபிறகு ஆரிகேனோ பவுடர் சிறிதளவு சேர்க்கவும்.

ஒரே நிமிடத்தில் சுவையான பீட்சா செய்முறை விளக்கம் 6:

இப்போது இந்த பீங்கான் கப்பை மைக்ரோவேவ் அவனில் 1 நிமிடம் வைக்க வேண்டும். 1 நிமிடம் கழித்து பீட்சாவானது பொங்கிய நிலையில் வந்து இருக்கும். இப்போது பீட்சா நன்றாக வெந்து இருக்கும். அவ்ளோதாங்க இந்த சுவையான பீட்சா ரெடி. கண்டிப்பா எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க..!

Related Posts

Leave a Comment

Translate »