சத்தான சுவையான அரிசி காய்கறி சூப்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள்

புழுங்கலரிசி – 2 டேபிள் ஸ்பூன்,
(கேரட், பீன்ஸ், பச்சைப்பட்டாணி, நூல்கோல், கோஸ், நாட்டுக் காய்கறிகள் அவரைக்காய், முள்ளங்கி, பச்சை மொச்சை கொட்டை, சர்க்கரைவள்ளி கிழங்கு, வெள்ளைப் பூசணி) ஏதாவது கலந்த காய்கறிகள் – 1/4 கப் (பொடியாக நறுக்கவும்),
இஞ்சி பூண்டு விழுது – 1/4 டீஸ்பூன்,
வெங்காயம்  – 1,
தக்காளி  – 1,
புதினா, கொத்த மல்லித்தழை  – சிறிது,
தேங்காய்ப்பால் – 1/2 கப்,
வெண்ணெய்  3 டீஸ்பூன் + எண்ணெய்  – 2 டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள்  – 1 சிட்டிகை,
உப்பு  – தேவைக்கு.

அரிசி காய்கறி சூப்

செய்முறை

அரிசியை நன்றாக கழுவி வேக வைக்கவும்.

காய்கறிகள், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து வெண்ணெய் + எண்ணெயை ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கிய பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் தக்காளி,  கரம் மசாலாத்தூள், புதினா, கொத்த மல்லித்தழை போட்டு வதக்கவும்.

பின்பு நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

இத்துடன் ஊற வைத்த அரிசியை போட்டு நன்றாக வதக்கி 3 கப் தண்ணீர், உப்பு போட்டு கொதித்ததும் குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கவும்.

ஆறியதும் தேங்காய்ப்பால் சேர்த்து பரிமாறவும்.

சூப்பரான அரிசி காய்கறி சூப் ரெடி.

கத்தரிக்காய், பீர்க்கங்காய், மஞ்சள் பூசணிக்காயை உப்பு போட்டு மசிய வேக வைத்து சூப்பில் சேர்க்கவும்.

Related Posts

Leave a Comment

Translate »