பெண்களே கைப்பையை புதிது போல் பாதுகாக்க டிப்ஸ்

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

சிலர் ஹேண்ட் பேக் வாங்குவதில் ஆர்வமாக இருப்பார்கள். ஷாப்பிங் என்றாலே அதில் முதல் தேர்வு ஹேண்ட் பேகாகத்தான் இருக்கும். அப்படி ஆடைக்கு ஏற்ப , ஸ்டைலுக்கு ஏற்ப என ஹேண்ட் பேகுகளை அதிக விலைக் கொடுத்து டசன் கணக்கில் வாங்கி வைத்திருந்தால் அதை எப்படி முறையாகப் பராமரிப்பது என்று பார்க்கலாம்.

ஹேண்ட் பேகுகளை வைப்பதற்கென்றே ஆர்கனைசர் விற்கப்படுகின்றன. இவை ஆன்லைனிலேயே சிறந்த விலைகளில் பட்ஜெட்டிற்கு ஏற்ப கிடைக்கின்றன. அவற்றில் நீங்கள் வைத்திருக்கும் பேக்குகளுக்கு ஏற்ப வாங்கி பயன்படுத்தலாம். அதில் அடுக்கி வைப்பதால் பாதுகாப்பாகவும் இருக்கும்.

பேகுகளை தனித்தனியே வைப்பதற்கு ஏற்ப அலமாரிகள் கிடைக்கின்றன. எனவே அதில் முறையாக அடுக்கி மூடி வைப்பதால் நீண்ட நாள் புதிது போல் பயன்படுத்தலாம். விருப்பப்பட்டால் தேவைக்கு ஏற்ப நீங்களே அலமாரியை செய்து கொள்ளலாம்.

ஸ்கிரீன் துணியை தொங்க விடுவதற்கென பயன்படுத்தப்படும் வளையங்களில் பேக்குகளை மாட்டி தொங்க விடலாம். இது செலவே இல்லாத சிறந்த யோசனையாக இருக்கும்.

நீளமான சங்கிலி வாங்கி அதில் S வளைவு ஹூக்குகளை மாட்டி அதில் ஹேண்ட் பேகுகளை மாட்டலாம். பேகின் அளவுக்கு ஏற்ப இடைவெளி விட்டு மாட்ட வேண்டும்.

ஹேண்ட்பேக் ஹேங்கர் அல்லது சட்டைகளை தொங்கவிடும் ஹேங்கரை அடுக்கடுக்காக சுவற்றில் அடித்து அதில் ஒவ்வொரு பேக்குகளாக தொங்க விடலாம்.

தேவையில்லாமல் புத்தக அலமாரி இருந்தாலும் அதை தூசி தட்டி ஹேண்ட் பேக் அலமாரியாகப் பயன்படுத்தலாம். அதை எடுக்கவும் வசதியாக இருக்கும். லெதர் பேகுகள் நீண்ட நாள் உழைக்கும்.

வீட்டில் சிறிய ஷெல்ஃப் பேக்குகளை வைப்பதற்கு ஏற்ப இருந்தால் அதை அழகாக இப்படி பேக்குகளை அடுக்க பயன்படுத்திக்கொள்ளலாம். பார்க்க ஷோகேஸ் ஷெல்ஃப் போல் வீட்டின் தோற்றத்தையும் அழகாக்கும்.

Related Posts

Leave a Comment

Translate »