யோகா வகைகள் மற்றும் பயன்கள்..! Yoga Benefits In Tamil..!

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

யோகாசனத்தை ஒரு நாள் மட்டும் செய்யாமல் தினமும் தவறாது பின்பற்றுதல் அவசியம். யோகா பயிற்சியை செய்வதால் உடல் ஃபிட்டாகவும், வயதானாலும் எளிமையான தோற்றத்தை அளிக்கும் ஆற்றல் யோகாசனத்திற்கு உள்ளது. சரி வாங்க இப்போது யோகா வகைகள் மற்றும் பயன்கள்(yoga benefits in tamil) பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்..!

யோகா வகைகள் மற்றும் பயன்கள்:

உத்தன்படசனா யோகா / Uttanpadasana yoga:

Yoga Exercise

இந்த உத்தன்படசனா ஆசனம் உடலில் உள்ள செரிமான உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இந்த யோகாசனம் செரிமான உறுப்புகளை சரி செய்வதோடு மட்டுமல்லாமல் மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குகிறது. இந்த ஆசனத்தின் சிறப்பு கணையம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த ஆசனம் மிகவும் நல்லது.

தடாசனா யோகா / Tadasana Yoga:

தடாசனா யோகா செய்வதால் தொடை, முழங்கால், கணுக்கால் பகுதிகளை பலப்படுத்துகிறது. அதோடு இடுப்பு, கால் பாதங்களுக்கு வலிமையை அதிகரித்து உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும் இந்த தடாசனா ஆசனம்.

திரிகோனசனா யோகா / Trikonasana Yoga:

திரிகோனசனா யோகா உடலில் அஜீரண பகுதியை குணப்படுத்தும். குறிப்பாக இடுப்பு, தொடை பகுதிக்கு நெகிழ்வு தன்மையை அளிக்கிறது. இந்த ஆசனம் செய்வதால் இடுப்பு மற்றும் தொடைகளில் இருக்கும் கொழுப்புகளை நீக்கிவிடும். சிறுநீரக செயல்பாட்டை அதிகமாக தூண்ட செய்யும்.

கோமுகசனா யோகா / Gomukhasana Yoga:

Yoga Exercise

கோமுகசனா ஆசனம் சிறுநீரக பகுதியை தூண்ட செய்யும். அதுமட்டும் இல்லாமல் நீரழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பாலியல் செயலிழப்பு போன்ற பிரச்சனைகளை நீக்கும் தன்மை இந்த கோமுகசனா ஆசனத்திற்கு உள்ளது.

பவனமுக்தாசனா யோகா / Pavanamuktasana Yoga:

Yoga Exercise

பாவனமுக்தாசனா ஆசனம் செய்வதால் வயிற்று தசைகளை வலுப்படுத்தும். செரிமான பகுதிகள் மற்றும் குடல் உறுப்புகளை மசாஜ் செய்யும் ஆற்றல் வாய்ந்தது பாவனமுக்தாசனா. அதோடு வாய்வு பிரச்சனை இல்லாமல் செரிமான பகுதியை மேம்படுத்துகிறது.

சுகாஸனா யோகா / Sukhasana Yoga:

Yoga Exercise

இந்த ஆசனம் காலர்போன்கள் மற்றும் மார்பு பகுதிகளை விரிவுபடுத்தக்கூடிய சிறந்த ஆசனம். முக்கியமாக இந்த சுகாஸனா யோகாசனம் மனதை அமைதி நிலைபடுத்தவும் மனதை மேம்படுத்தவும் செய்கிறது.

இந்த ஆசனம் செய்வதினால் மனதில் இருக்கக்கூடிய கவலைகள், மன அழுத்தம், உடல் சோர்வு பிரச்சனைகள் நீங்கும்.

ஷலபாசனா யோகா / Shalabhasana Yoga:

Yoga Exercise

உடலில் இருக்கும் பின்புற தசைகளை வலுப்படுத்துவதில் மிகவும் சிறந்த யோகாசனம் இந்த ஷலபாசனா யோகாசனம். குறிப்பாக அதிகமாக முதுகு வலி உள்ளவர்கள் இந்த ஷலபாசனா ஆசனத்தை தினமும் பொறுமையாக செய்யலாம்.

பாலசனா யோகா / Balasana Yoga:

Yoga Exercise

பாலசனா யோகா செய்வதால் இடுப்பு பகுதிகள், தொடை, கணுக்கால் தசைகளை நீட்டி பலப்படுத்தும் தன்மை இந்த பாலசனா யோகாவிற்கு இருக்கிறது. இந்த ஆசனம் செய்வதினால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதுமட்டும் இல்லாமல் மன அழுத்தம், உடல் சோர்வை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் பாலசனா யோகாசனம்.

உஸ்ட்ராசனா யோகா / Ustrasana Yoga:

Yoga Exercise

உஸ்ட்ராசனா யோகாவில் தொடைகளில் இருக்கும் கொழுப்புகளை குறைத்துவிடும். அதோடு இந்த ஆசனம் தோள்களை பலப்படுத்தும் சக்தியை பெற்றுள்ளது. உஸ்ட்ராசனா வயிற்றுப் பகுதியை விரிவுபடுத்துகிறது. அடுத்து முதுகில் ஏற்படும் வலியை குறைத்து, செரிமான பிரச்சனைகளை மேம்படுத்துகிறது.

கதிசக்ராசனா யோகா / Katichakrasana Yoga:

Yoga Exercise

கதிசக்ராசனா யோகா பயிற்சி செய்வதால் உடலில் இருக்கும் மலச்சிக்கலை நீக்கும். அதுமட்டும் இல்லாமல் கதிசக்ராசனா யோகாவால் முதுகெலும்பு மற்றும் இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும் சக்தியை பெற்றுள்ளது இந்த ஆசனம்.

இந்த யோகாசனம் செய்து வந்தால் கை, கால் தசைகள், கழுத்து பகுதிகள் நன்கு சீராக இருக்கும். இதனால் தோல்கள் வயிற்று தசைகளை பலப்படுத்தும்.

புஜங்கசனா யோகாசனம் / Bhujangasana Yoga:

Bhujangasana - Cobra Yoga Pose

புஜங்கசனா ஆசனம் செய்வதால் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்சனையை சரிசெய்யும் ஆற்றல் வாய்ந்தது.  அதோடு மனநிலை பிரச்சனையை சரி செய்கிறது. இந்த ஆசனம் சிறுநீரகம், இதய உறுப்புகளை தூண்ட செய்கிறது.

பெண்கள் இந்த யோகாசனத்தை தினமும் செய்து வந்தால் உடலில் இருக்கும் மன அழுத்த பிரச்சனை குறைந்துவிடும். உடல் சோர்வுத்தன்மையை அகற்றி உடலை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.

கூர்மாசன யோகாசனம் / Kurmasana Yoga:

Yoga Exercise

இந்த கூர்மாசன யோகாசனம் கால், முதுகு பகுதி, தோல் பகுதிகள், மற்றும் மார்பு தசைகளை நீட்டிக்க செய்கிறது. அடுத்து இந்த ஆசனம் சுவாச பிரச்சனை வராமலும் மற்றும் செரிமான பகுதிகளை சீராக வைத்திருக்க உதவுவதால் இந்த கூர்மாசனத்தை தினமும் செய்து வந்தால் உடல் வலிமையாக இருக்கும்.

சேட்டு பந்த சர்வாங்காசனம் / Setu Bandha Sarvangasana Yoga:

Yoga Exercise

சேட்டு பந்த சர்வாங்காசனம் மார்பு பகுதி, கழுத்து, முதுகெலும்பு, மற்றும் இடுப்பு பகுதிகளை நீட்ட செய்கிறது. இந்த யோகாசனம் செய்வதால் உடலில் இரத்த ஓட்டம் சீராக அமையும். அதுமட்டும் இல்லாமல் இந்த ஆசனத்தின் நன்மை முதுகு பின்புறம், உடல் பிட்டம் மற்றும் தொடை பகுதிகளை மேம்படுத்த இந்த ஆசனம் உதவுகிறது.

இந்த யோகாவின் மூலம் உடலில் சிலருக்கு தமனி அடைப்பு பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்தால் குணமாகும். அதோடு இதய பிரச்சனை உள்ளவர்களுக்கும் இந்த ஆசனம் சிறந்தது.

மத்ஸ்யாசன யோகா / Matsyasana Yoga:

Yoga Exercise

மத்ஸ்யாசன யோகா செய்து வந்தால் சுவாச கோளாறு பிரச்சனை நீங்கும். அதுமட்டும் இல்லாமல் இந்த ஆசனம் பிட்யூட்டரி, பாராதைராய்டு, மற்றும் பினியல் சுரப்பிகளையும் சீராக வைத்திருக்க இந்த ஆசனம் மிகவும் உதவியாக உள்ளது.

இந்த மத்ஸ்யாசனம் கழுத்து பின்புறத்தில் இருக்கும் தசை பகுதிகளையும் வலிமையாக்குகிறது.

Related Posts

Leave a Comment

Translate »