தேவையான பொருட்கள்:-
- கோதுமை மாவு – 1 கப்
- சர்க்கரை பவுடர் – 1/2 கப்
- நெய் (அல்லது) வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- பொரிப்பதற்கு எண்ணெய் தேவையான அளவு
செய்முறை விளக்கம்:-
ஸ்டேப்: 1
ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு கப் கோதுமை, சர்க்கரை பவுடர் 1/2 கப் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 2
பின் கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கோதுமை மாவை சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளுங்கள். (குறிப்பு: இவற்றில் சர்க்கரை சேர்த்திருப்பதால் தண்ணீர் சேர்த்து பிசையும் போது மாவு இளகும், எனவே தண்ணீர் சேர்க்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.)
ஸ்டேப்: 3
கோதுமை மாவை பிசைந்த பின் 10 நிமிடங்கள் நன்றாக ஊறவைக்க வேண்டும், பின் சப்பாத்தி கட்டையில் பிசைந்த கோதுமை மாவை அப்படியே எடுத்து பெரிய உருண்டையாக உருட்டி ஓரளவு தடிமனாக தேய்த்து கொள்ளுங்கள். மேல் கட்டப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் மாவினை தேய்த்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 4
பின் மேல் கட்டப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் ஒரு சிறிய மூடியை எடுத்துக்கொள்ளுங்கள், பின் இந்த மூடியை பயன்படுத்தி தேய்த்த கோதுமை மாவை சிறு சிறு துண்டுகளாக கட் செய்த்து எடுத்துக்கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 5
பின் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடேறியதும், அடுப்பை மிதமான சூட்டில் பிஸ்கட்டை வைத்து நன்றாக பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்க வேண்டும். (குறிப்பு பிஸ்கட்டை எண்ணெயில் பொரிக்கும் போது அடிக்கடி பிஸ்கட்டினை கிளறிவிட வேண்டும்)
இவ்வாறு பொரித்தெடுத்தால் சுவையான கோதுமை பிஸ்கட் தயார்.