5 நிமிடத்தில் மொறுமொறுனு ஸ்னாக்ஸ் செஞ்சி பாருங்க..! Rava snacks recipes in tamil..!

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள்:-

  1. ரவை – ஒரு கப்
  2. தண்ணீர் – இரண்டு கப்
  3. சீரகம் – ஒரு ஸ்பூன்
  4. வரமிளகாய் துகள்கள் (chilli flakes) – ஒரு ஸ்பூன்
  5. உருளைக்கிழங்கு – 2 (வேகவைத்து தோல் நீக்கி கொள்ளுங்கள்)
  6. கொத்தமல்லி இலைகள் –  சிறிதளவு (பொடிதாக நறுக்கியது)
  7. உப்பு – தேவையான அளவு
  8. எண்ணெய் – 1/2 லிட்டர்

Rava snacks recipes in tamil :- 

செய்முறை:-

Step: 1

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் இரண்டு கப் தண்ணீர், 2 ஸ்பூன் ஆயில், தேவையான அளவு உப்பு, ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் ஒரு ஸ்பூன் வரமிளகாய் துகள்கள் (chilli flakes) ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள்.

Step: 2

தண்ணீர் நன்கு கொதித்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக்கொள்ளுங்கள், பின் ஒரு கப் ரவையை கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து கட்டிகள் பிடிக்காதவாறு கிளறிவிடுங்கள்.

தண்ணீர் நன்கு வற்றி ரவை வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ரவையை நன்கு ஆறவையுங்கள்.

Step: 3

ரவை நன்கு ஆறியதும் வேகவைத்த இரண்டு உருளைக்கிழங்கினை எடுத்து நன்றாக மசித்து கொள்ளுங்கள், பின் வேகவைத்த ரவையுடன் இந்த உருளைக்கிழங்கினை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.

Step: 4

rava recipe 1

பின் பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து பிசைய வேண்டும். அதாவது சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைய வேண்டும்.

rava recipe 2

Step: 5

பின் சப்பாத்தி தேய்க்கும் பலகையை எடுத்து கொள்ளுங்கள், அவற்றில் சிறிதளவு பிசைந்த ரவை மாவை எடுத்து மேல் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் நீளமாக தேய்த்து கொள்ளுங்கள்.

rava recipe 3

Step: 6

பின் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் 1/2 லிட்டர் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடேறியதும் கட் செய்து வைத்துள்ள துண்டுகளை எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

Related Posts

Leave a Comment

Translate »