அரிசி வடகம் செய்ய தேவையான பொருட்கள்:-
- புழுங்கல் அரிசி – 2 டம்ளர்
- ஜவ்வரிசி – 50 கிராம்
- பச்சை மிளகாய் – 5 (பேஸ்ட்டு போல் அரைத்து கொள்ளுங்கள்)
- சீரகம் – 1 ஸ்பூன்
- பெருங்காய தூள் – 1 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
அரிசி வடகம் செய்வது எப்படி? ஸ்டேப்: 1
முதலில் 2 டம்ளர் புழுங்கல் அரிசி மற்றும் 50 கிராம் ஜவ்வரிசி இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
பின் ஊறவைத்த அரிசியை சுத்தமாக கழுவி கிரைண்டரில் சேர்த்து மைபோல் அரைதேடுக்க வேண்டும். மாவை அரைத்த பின் கிரைண்டரை கழுவிய தண்ணீரை இரண்டு கிளாஸ் அளவு எடுத்து அரைத்த மாவில் ஊற்றி கிளறிவிட வேண்டும்.
அரிசி கூழ் வடகம் செய்வது எப்படி? ஸ்டேப்: 2
பின் அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து அவற்றில் எட்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்து வர ஆரம்பிக்கும் பொழுது ஐந்து பச்சை மிளகாவை அரைத்து இந்த நீரில் ஊற்ற வேண்டும்.
Rice vadagam step: 3
பிறகு ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் பெருங்காயம் தூள் மற்றும் உப்பு தேவையான அளவு ஆகியவற்றை சேர்த்து கிளற வேண்டும்.
தண்ணீர் ஓரளவு சூடாக்கி, அரைத்த அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக இவற்றில் சேர்த்து இடைவேளை இல்லாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும். கிளறுவதை நிறுத்தினால் மாவு கட்டி பிடித்து கொள்ளும் எனவே இடைவிடாது மாவை 10 நிமிடங்கள் வரை கிளற வேண்டும்.
ஸ்டேப்: 4
வடகம் மாவு 10 நிமிடத்தில் வெந்து விடும் எனவே 10 நிமிடங்கள் கழித்து மாவை வெந்துவிட்டதா என்பதை பரிசோதனை செய்து பாருங்கள். அதாவது தங்கள் கையை தண்ணீரில் நனைத்து வடகம் மாவை தொட்டு பாருங்கள், மாவு கைகளில் ஒட்டாமல் இருந்தால் மாவு நன்றாக வெந்துவிட்டது என்று அர்த்தம், கைகளில் மாவு ஓட்டினால் சிறிது நேரம் மாவை இடைவிடாது கிளறி பின் மாவை அடுப்பில் இருந்து இறக்கி அகலமான பாத்திரத்தில் கொட்டி சிறிது நேரம் ஆறவைக்கவும்.
ஸ்டேப்: 5
மாவு நன்றாக ஆறியதும் ஒரு காட்டன் துணியை வெயில் அதிகம் அடிக்கும் இடத்தில் நன்றாக விரித்து கொள்ளுங்கள். பின் மாவை முறுக்கு அச்சியில் வைத்து துணியில் நேராக பிழிந்து விட வேண்டும்.
இவ்வாறு வேகவைத்த அனைத்து மாவையும் பிழிந்து கொள்ளுங்கள். பின் ஒரு நாள் முழுவதும் வெயிலில் நன்றாக காயவைக்க வேண்டும்.
ஸ்டேப்: 6
வடகம் நன்கு காய்ந்த பின் துணியில் தண்ணீர் தெளித்து வடகத்தை உரித்துத்தேடுக்க வேண்டும்.
பின் ஒரு அகன்ற தட்டில் உரித்த வடகத்தை பரவலாக கொட்டி இரண்டு நாட்கள் வெயிலும் காயவைத்து எடுத்தால் அரிசி வடகம் தயார்.
நன்றாக காய்ந்த வத்தலை ஒரு சுத்தமான டப்பாவில் கொட்டி காற்று புகாத அளவிற்கு நன்றாக மூடி வைத்தால், இந்த வடகத்தை ஒரு வருடம் வரை வைத்து பயன்படுத்தலாம்.
அவ்வளவுதான் செய்முறை முடிந்தது மேல் கூறப்பட்டுள்ள செய்முறை வைக்கலாம் படி அரிசி வடகம் செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்.