உளுந்தங்களி(ulundhu kali) சாப்பிடுவதால் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அதிகம் அளிக்கிறது. உளுந்தில் புரதம், கொழுப்பு, வைட்டமின் B மற்றும் கார்போஹைடிரேட் சத்துகள் அதிகம் உள்ளன. மேலும் பெண்களுக்கு தேவையான இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவற்றை தந்து இடுப்பு எலும்புகளை வலுப்படுத்துகிறது. உளுந்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. நரம்பு மண்டலம் வலிமை பெற உதவுகிறது.
உளுந்தங்களி செய்ய தேவையான பொருட்கள்:
- அரைத்த உளுந்து மாவு – 4 கை அளவு
- கருப்பட்டி அல்லது வெல்லம் – சுவைக்கு ஏற்ப (தோராயமாக 100 கிராம்)
- தேங்காய் துருவியது – 3 ஸ்பூன்
- நல்ல எண்ணெய் – 4 ஸ்பூன்
- அரிசி மாவு – 4 ஸ்பூன்
உளுந்தங்களி செய்முறை விளக்கம் (How To Make Ulundhu Kali):
உளுந்தங்களி செய்முறை ஸ்டேப்: 1
வீட்டில் உள்ள நபர்களுக்கு ஏற்ப உளுந்து மாவு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அரைத்த உளுந்து மாவை புளிக்க வைக்க கூடாது.
உளுந்தங்களி செய்முறை ஸ்டேப்: 2
பிரிட்ஜ்ஜில் வைத்து நேரம் கிடைக்கும் போது களி செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.
முதலில் கருப்பட்டி அல்லது வெல்லத்தை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
முறை நன்றாக கலக்கி விட்டு உப்புமா செய்வதற்கு கொதிக்கும் நீரில் ரவையை சிறிது சிறிதாக சேர்த்து வட்ட வடிவத்தில் கரண்டியால் சுற்றுவோம் அல்லவா? அதை போல் கிண்டவும்.
உளுந்தங்களி செய்முறை ஸ்டேப்: 4
ஐந்து நிமிடம் வரை நன்கு சேர்த்து ஒரு கேசரி பதம் வரும் போது தீயை மிதமாக வைத்து நல்லெண்ணெய் சேர்க்கவும். களி வெந்து டப் டப் என்று சத்தத்துடன் முட்டை போல் வரும்.
அந்த நேரத்தில் தேய்காய் துருவல் சேர்த்து ஒரு முறை கிண்டி கருப்பட்டி அல்லது வெல்லக் கரைசலை வடிகட்டி களியில் சேர்த்து 5 நிமிடம் வேக விடவும்.
உளுந்தங்களி செய்முறை ஸ்டேப்: 5
உளுந்தின் பச்சை வாசனை போய் கருப்பட்டி அல்லது வெல்லம் கரைசல் கட்டியானதும் இறக்கிவிடவும்.
சுவையான உளுத்தங்களி தயார்.
குறிப்பு:
- சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் வெல்லக் கரைசலுடன் சுக்குப் பொடியையும் சேர்த்து களி தயார் செய்யலாம்.
- சிறிது பாசிபருப்பை வேகவைத்து சேர்த்தும் களி தயார் செய்யலாம்.
- குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருந்தால் நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ், ஏலக்காய் ஆகியவற்றை வறுத்து களியோடு சேர்த்துக் கொடுக்கலாம்.
- உளுந்தின் அளவிற்கு ஏற்ப அரிசி மாவின் அளவினைக் கூட்டியோ, குறைத்தோ சேர்க்கவும். இது தான் களி கெட்டிப்பட உதவுகிறது.
உளுந்தங்களி பயன்கள் (ulundhu kali):
முக்கியமாக விளையாட்டு வீரர்கள், ஓயாமல் ஓடிக் கொண்டே இருக்கும் உழைப்பாளிகள், தினமும் இதனை எடுத்துக் கொள்ளலாம். முதுகு வலி, இடுப்புவலி இரண்டுமே இருக்காது.
உளுந்தங்களி பயன்கள்:
மலையேற்றம் மேற்கொள்பவர்கள் இதனை உட்கொண்டால் உடல்சோர்வே இருக்காது. பெண்களுக்கு கர்ப்பபை மிகவும் வலுப்பெறும். இந்த உளுந்தங்களி (ulundhu kali) சாப்பிடுவதினால்.
உளுந்தங்களி பயன்கள்:
வயிற்று சம்மந்தமான பிரச்சனை உள்ளவர்கள், சிறுநீரக கோளாறு உள்ளவர்கள், நரம்பு கோளாறு உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், உடல் சோர்வுடையவர்கள், ஆண்மை குறைபாடு, தலைமுடி உதிர்தல், இதய நோயாளிகள் என்று அனைவருமே வாரத்தில் இரண்டு முறை உளுந்தங்களி (ulundhu kali) சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது.
உளுந்தங்களி பயன்கள் (Ulundhu Kali Benefits):
உளுந்தில் (ulundhu kali benefits) நம் உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, வைட்டமின் B மற்றும் கார்போஹைடிரேட் சத்துக்கள் அதிகம் உள்ளன.
உளுந்து பெண்களுக்கு தேவையான இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவற்றை தந்து இடுப்பு எலும்புகளை வலுப்படுத்துகிறது.
உளுந்தங்களி பயன்கள்:
உளுந்தில் (ulundhu kali benefits) உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. நரம்பு மண்டலம் வலிமை பெற உதவுகிறது.
ஆயுர்வேத கூற்றுப்படி உளுந்து பித்தம் மற்றும் கபத்தை கட்டுப்படுத்தி செரிமானத்தை அதிகப்படுத்துகிறது.
உளுந்தங்களி பயன்கள்:
ஆண்களுக்கும் எலும்பு வலுப்பெற்று ஆரோக்கியமாக வாழ வழி செய்கிறது.
உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிக முக்கியமான உறுப்பு. கல்லீரல் செயல்பாட்டிற்கு தேவையான புரதச்சத்தை உளுந்து அளிக்கிறது.
கருப்பு உளுந்தில் புரதம் அதிகமாக உள்ளதால் தான் நாம் அன்றாடம் உண்ணும் இட்லி மற்றும் தோசைகளில் சேர்க்கப்படுகிறது.
உளுந்தங்களி பயன்கள்:
பெண்களின் வாழ்க்கையில் மாதவிடாய் என்பது இயற்கையான ஒன்று, ஆனால் மாதாமாதம் அவர்கள் அக்காலத்தில் படும் அவஸ்தைகள் ஏராளம் என்று படித்து இருக்கிறேன்.
சூதகவலி (Dsymenorrhea) அதாவது வலியுடன் கொண்ட மாதவிலக்கு நேரங்களில் வலியில் இருந்து நிவாரணம் பெற கருப்பு உளுந்துகளியை (ulundhu kali benefits) பாட்டி வைத்தியத்தில் பரிந்துரை செய்வார்கள்.
உளுந்தைகளி பயன்கள்:
உளுந்தைகளி உடல் உஷ்ணத்தை தணிக்க கூடியது, எனவே உடலில் உஷ்ணம் அதிகரிக்கும் போது. உளுந்தைகளி உண்டு வர உடல் சூடு தணியும்.
உளுந்து பயன்கள்:
ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு அதிகமாகிறது. சுக்கு, வெந்தயம், தவிடு நீக்காத பச்சரிசியுடன் உளுந்து சேர்த்து, பனை வெல்லம் கலந்து களி செய்து சாப்பிடால் உடல் சூடு தணியும்.
உளுந்து பயன்கள்:
உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும்.