ஹோம்மேட் பாத் பவுடர் தயாரிப்பதற்கு:
- கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன்
- ரோஸ் இதழ் பவுடர் – 1 ஸ்பூன்
- பால் பவுடர் – 2 ஸ்பூன்
- பச்சை பயிறு அரைத்தது – 1 ஸ்பூன்
- கஸ்தூரி மஞ்சள் தூள் – சிறிதளவு
- வெள்ளரி டோனர் அல்லது பால் – சிறிதளவு
முகம் வெள்ளையாக மாற செய்முறை விளக்கம் 1:
முதலில் பாத் பவுடர் தயார் செய்வதற்கு காற்று புகாதவாறு இருக்கும் ஒரு பவுலை எடுத்துக்கொள்ளவும். அந்த பவுலில் கடலை மாவை 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும்.
முகம் மற்றும் உடல் வெள்ளையாக மாற ஹோம்மேட் பாத் பவுடர் செய்முறை விளக்கம் 2:
கடலை மாவை சேர்த்த பிறகு ரோஸ் இதழ் பவுடர் 1 ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக்கொள்ள வேண்டும். ரோஸ் இதழ் பவுடர் வீட்டில் இல்லாதவர்கள் ரோஸ் இதழை வீட்டில் காயவைத்து பவுடர் செய்ததையும் சேர்த்துக்கொள்ளலாம்.
முகம் அழகு பெற பவுடர் செய்முறை விளக்கம் 3:
பவுலில் ரோஸ் இதழின் பவுடரை சேர்த்த பிறகு பால் பவுடர் 2 ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக்கொள்ளவும். பால் பவுடர் சேர்ப்பதால் முகம் எப்போதும் பொலிவோடு காணப்படும். அடுத்து வீட்டில் இருக்கும் பச்சை பயிரின் பவுடரை 1 ஸ்பூன் அளவு சேர்த்துக்கொள்ளவும்.
முகம் பளபளப்பாக மாற ஹெர்பல் பாத் பவுடர் செய்முறை விளக்கம் 4:
அடுத்ததாக பவுலில் சேர்க்க வேண்டியது சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் சேர்க்கவும். இப்போது எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் செய்துக்கொள்ளவும். இந்த பவுடரை தண்ணீர் படாத அளவிற்கு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
முகம் பளிச்சென்று இருக்க செய்முறை விளக்கம் 5:
இந்த பவுடரை குளிக்கும் முன் ஒரு ஸ்பூன் அளவிற்கு தனியாக ஒரு பவுலில் எடுத்துக்கொள்ளவும். அடுத்து பால் அல்லது வெள்ளரி டோனரை சிறிதளவு சேர்க்கவும். அடுத்து நன்றாக மிக்ஸ் செய்து குளிக்கும் 30 நிமிடம் முன்பு முகம் மற்றும் உடல் பகுதிகளில் அப்ளை செய்துகொள்ளவும்.
நன்றாக காய்ந்த பிறகு தண்ணீரில் வாஷ் செய்துக்கொள்ளலாம். முகத்தில் இந்த பவுடரை வாஷ் செய்த பிறகு தான் மற்ற பேஸ் வாஷ், சோப் பயன்படுத்த வேண்டும். முகம் கருமையாக உள்ளது என்று நினைப்பவர்கள் இந்த டிப்ஸை கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க நல்ல மாற்றம் கிடைக்கும்..!